மும்பையில் சனிக்கிழமை (மார்ச் 7 ) இரவு 'எஸ் வங்கி' நிறுவனர் ராணா கபூரை, நிதி மோசடி குற்றச்சாட்டில் அமலாக்க இயக்குநரகம் (இ.டி) கைது செய்ததாக செய்தி நிறுவனம் பி.டி.ஐ தெரிவித்துள்ளது. முன்னதாக எஸ் வங்கி ப்ரோமோட்டர்ஸ் தொடர்புடைய வளாகங்களில் இயக்குநரகம் சோதனை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது .
Advertisment
விசாரணையில் ஒத்துழைக்காத காரணத்தால் நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ் அதிகாலை 3 மணியளவில் ராணா கபூர் கைது செய்யப்பட்டு உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ராணா கபூரை மூன்று நாள் போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.
ராணா கபூருக்கு சொந்தமான DoIT Urban Ventures (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு, திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்டின் (டி.எச்.எஃப்.எல்) இணை நிறுவனத்திடமிருந்து (NBFC) எவ்வாறு ரூ .600 கோடி கடனாக பெற்றார் என்று விசாரிக்கப்பட்டது.
ஆனால், அந்த நேரத்தில், திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் 'யெஸ் வங்கிக்கு' திரும்பிக் கொடுக்க வேண்டிய கடன் 3000 கோடிக்கு மேல் இருந்தது. இதுவே, அமலாக்க இயக்குநரக அதிகாரிகளுக்கு பெரிய சந்தேத்தை எழுப்பியது. ஏன், 'யெஸ் வங்கி' கடனை திரும்ப பெற டி.எச்.எஃப்.எல் நிறுவனத்தை ஏன் வற்புறுத்தவில்லை. DoIT Urban Ventures நிறுவனம் டி.எச்.எஃப்.எல்-ன் இணை நிறுவனத்திடம் கடனாக வாங்கிய 600 கோடி நிதி மோசடியா(லஞ்சமா?) என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களின் படி, DoIT Urban Ventures என்ற நிறுவனம் 2012 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனர் ராணா கபூரின் மனைவி பிந்து ஆவார். ராணா கபூர் 'யெஸ் வங்கியின்' நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
DoIT Urban Ventures நிறுவனத்தில் எந்த ஊழியர்களும் பணியமர்த்தப் படவில்லை. 2019 மார்ச் மாத ஆண்டு கணக்கின் படி இந்த நிறுவனம் ,தனது 59.36 கோடி வருவாயில் ரூ .48 கோடிக்கு மேல் இழப்பாக காட்டியுள்ளது.
இந்த நிறுவனத்தின் மற்றொரு ப்ரோமோட்டர்ஸ் 'மோர்கன் கிரெடிட்ஸ் பிரைவேட் லிமிடெட் ' ஆகும். ராணா கபூரின் மகள்களான ரோஷினி கபூர், ராகே கபூர் டாண்டன், ராதா கபூர் கன்னா ஆகியோர் மோர்கன் கிரெடிட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“