சிறப்புரிமை பெற்றதால் முஸ்லிம்கள் மக்கள்தொகை அதிகரித்துள்ளது – உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரிவினைக்குப் பிறகு, இந்தியாவில் முஸ்லீம் மக்கள்தொகை பலமடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அவர்களுக்கு பாகிஸ்தானைப் போல இல்லாமல் சிறப்பு உரிமைகள் மற்றும் வசதிகள் வழங்கப்பட்டன என்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.

yogi adityanath, yogi adityanath speaks about CAA, yogi adityanath speaks about muslims population, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், யோகி ஆதித்யநாத், சிஏஏ, குடியுரிமை திருத்தச் சட்டம், முஸ்லிம்கள் மக்கள்தொகை, yogi adityanath on caa, yogi adityanath citizenship law, adityanath on muslim population, yogi adityanath on nrc, up caa violence, up caa arrests, caa protests, supportive rally to caa in gaya, bjp
yogi adityanath, yogi adityanath speaks about CAA, yogi adityanath speaks about muslims population, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், யோகி ஆதித்யநாத், சிஏஏ, குடியுரிமை திருத்தச் சட்டம், முஸ்லிம்கள் மக்கள்தொகை, yogi adityanath on caa, yogi adityanath citizenship law, adityanath on muslim population, yogi adityanath on nrc, up caa violence, up caa arrests, caa protests, supportive rally to caa in gaya, bjp

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரிவினைக்குப் பிறகு, இந்தியாவில் முஸ்லிம்கள் மக்கள்தொகை பலமடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அவர்களுக்கு பாகிஸ்தானைப் போல இல்லாமல் சிறப்பு உரிமைகள் மற்றும் வசதிகள் வழங்கப்பட்டன என்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.

ரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்…

பீகாரில் உள்ள கயாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) ஆதரவாக பாஜக ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஒரு வக்கிரமான எதிர்க்கட்சியின் உதவியுடன் கூடிய சதி என்றும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சிஏஏவை கொண்டு வந்ததற்காக தாக்கப்படக்கூடாது என்றும் அவர் கூறினார்.

மேலும், அவர் பேசுகையில், “இந்தியாவில் முஸ்லிம் மக்கள்தொகை 1947 முதல் பலமடங்கு அதிகரித்துள்ளது. அது ஏழு முதல் எட்டு மடங்கு வரை அதிகரித்துள்ளது. இதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை. அவர்கள், நாட்டின் குடிமக்களாக, வளர்ச்சிக்காக உழைத்தால் அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். அவர்களுக்கு சிறப்பு உரிமைகள் மற்றும் வசதிகள் வழங்கப்பட்டிருப்பதால் அவர்களின் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. அவர்களின் வளர்ச்சியை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. ஆனால் பாகிஸ்தானில் என்ன நடந்தது?” என்று கேள்வி எழுப்பினார்.

1947 முதல் பாகிஸ்தானில் இந்து மக்கள்தொகை ஏன் குறைந்துவிட்டது? அவர்கள் எங்கு சென்றார்கள் என்பதற்கான துப்பு எதுவும் இல்லை என்று யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பினார்.

மேலும், யோகி ஆதித்யநாத் பேசுகையில், “சிஏஏ-வை எதிர்ப்பவர்கள் தேசிய நலன்களுக்கு எதிராக செயல்படுவதற்கான பாவத்தை செய்கிறார்கள் என்று முதல்வர் கூறினார். பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியும் பீகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆகியோரும் சிஏஏ எவ்வாறு துன்புறுத்தப்பட்ட அகதிகளுக்கு குடியுரிமை வழங்குகிறது என்பது பற்றியும் அதை யாரிடமிருந்தும் பறிப்பது அல்ல என்பதை பற்றியும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்” என்று கூறினார்.

“நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு வக்கிரமான எதிர்க்கட்சி எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுகிறது. ஆனால், அது தூரத்திலிருந்தே செய்யப்படும் சதி என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மோடியின் கீழ் ஒரு யதார்த்தமாக மாறிவரும் ஐக்கிய இந்தியா, மிகப்பெரிய இந்தியா (ஏக் பாரத் ஸ்ரேத் பாரத்) மீது அதிருப்தி அடைந்தவர்களால் இந்த விமர்சனங்கள் வைக்கபடுகிறது” என்று ஆதித்யநாத் கூறினார்.

சிஏஏ-வுக்கு ஆதரவான பொதுக்கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், மோடி அரசாங்கம், மதத்தின் அடிப்படையில் மக்களிடம் பாகுபாடு காட்டவில்லை என்பதை வலியுறுத்திய அவர், உஜ்வாலா யோஜனா, ஆயுஷ்மான் பாரத் போன்ற நலத்திட்டங்களால் பல மக்கள் பயனடைந்துள்ளனர் என்றார். “ஒரு பயனாளியாக சேர்க்கப்படுவதற்கு முன்பு, அவரது மதம் அல்லது சாதி பற்றி யாராவது கேட்கப்பட்டார்களா?”என்று அவர் கூறினார்.

“இந்த புதிய இந்தியா பாக்கிஸ்தானின் அணுசக்திக்கு முன்னர் காங்கிரஸைப் போலவே ஊக்கமளிக்கவில்லை. ஜவஹர்லால் நேரு தவறாக அறிமுகப்படுத்திய 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர், அண்டை நாடு இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைக் கூட இழக்க நேரிடும் என்று அஞ்சுகிறது” என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

யோகி ஆதித்யநாத் தனது உரையில் பாபாசாகேப் பி.ஆர்.அம்பேத்கரை குறிப்பிட்டு பேசுகையில், “புரட்சியாளராக மாறிய சுதந்திர போராட்ட வீரர் ஸ்ரீ அரவிந்தோ, தற்போதைய காலங்களில் மிகப்பெரிய நற்பண்பு தேசிய நலனுக்காக உழைப்பதே என்றும் அதற்கு எதிராக செயல்படுவதே மிகப்பெரிய பாவம் என்றும் கூறினார். எதிர்க்கட்சி பாவம் செய்கிறது. இதைப் புரிந்து கொள்ள நீங்கள் அம்பேத்கர் மற்றும் ஜோகேந்திர நாத் மண்டலின் மாறுபட்ட எடுத்துக்காட்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஜின்னாவின் வடிவமைப்புகளுக்காக மண்டல் வீழ்ந்தபோது பாகிஸ்தானை உருவாக்க உதவினார். மேலும், அந்த நாட்டில் அமைச்சரானார். அம்பேத்கர் தனது நாட்டுக்கு விசுவாசமாக இருந்தார்.” என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “அம்பேத்கர் ஒரு மரியாதைக்குரிய நபராக இருக்கும்போது ​​மண்டல் பாகிஸ்தானில் மிகவும் திணறினார். ஒரு தசாப்தத்திற்குள் அவர் ராஜினாமா செய்துவிட்டு கொல்கத்தாவுக்கு வந்தார். அங்கு அவர் தனது கடைசி ஆண்டுகளை அநாமதேய வாழ்க்கையை வாழ்ந்தார். இது அனைவருக்கும் தெரிந்திருக்கும். தேசிய நலன்களுக்கு எதிராக செயல்படுபவர் இது போன்ற தலைவிதிக்கு கண்டனம் செய்யப்படுவார்கள்” என்று கூறினார்.

பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் செல்லும் வழியில் ஓட்டப்பட்டிருந்த காங்கிரஸ்-ஆர்.ஜே.டி கட்சிகளின் சிஏஏ எதிர்ப்பு சுவரொட்டிகளைப் பற்றி யோகி ஆதித்யநாத் குறிப்பிடுகையில், “நெருக்கடி நிலையை சுமத்துவதன் மூலம் அரசியலமைப்பை கழுத்தை நெரித்த ஒரு கட்சிக்கு அவ்வாறு செய்ய தைரியம் உள்ளது.” என்று கூறினார்.

“ராமர் கோயில் பிரச்சினையில் காங்கிரஸ் பயமுறுத்தியது. இந்த விவகாரம் அதன் தர்க்கரீதியான முடிவுக்கு எடுத்துச்செல்லப்பட்டால் தெருக்களில் இரத்தம் சிந்தப்படும் என்று கூறினர். இப்போது அது ஒரு முறை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், மகர சங்கராந்தியின் புனித சந்தர்ப்பத்தில் எனது மாநிலத்தில் அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் தயாராகி விடும் என அறிவிக்கிறேன்” என்று கூறினார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Yogi adityanath muslim population increased manifold as they got special rights

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express