ஐதராபாத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “நாங்கள் வெற்றி பெற்றால் ஐதராபாத்தை பாக்யநகர் என மாற்றுவோம்… ஐதராபாத்தை பாக்யநகர் என்று பெயர் மாற்ற முடியுமா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். நான் ஏன் மாற்றக் கூடாது என்று கூறினேன். உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபின் பைசாபாத்தை அயோத்தி என்றும் அலகாபாத்தை பிரயாக்ராஜ் என்றும் பெயர் மாற்றினோம் என்று அவர்களிடம் கூறினேன். பிறகு ஏன் ஐதராபாத் பாக்யநகராக மாற்ற முடியாது? ” என்று கூறினார்.
டிசம்பர் 1ம் தேதி நடைபெற உள்ள கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்திற்காக பாஜகவால் நியமிக்கப்பட்ட தலைவர்களின் நீண்ட பட்டியலில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இணைந்துள்ளார். ஐதராபாத் நகருக்கு ஞாயிற்றுக்கிழம வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவில் இருந்து கட்சித் தலைவர் ஜே.பி. நாட்டா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மற்றும் இளைஞர் பிரிவுத் தலைவர் தேஜஸ்வி சூர்யா பலர் ஐதாராபாத் வர உள்ளனர். இதுமட்டுமில்லாமல், கட்சியின் பொதுச் செயலாளரும், பீகார் தேர்தலில் வெற்றிபெறக் காரணமான பூபேந்தர் யாதவ், தேர்தல் பணிகளை மேற்பார்வையிட ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளார்.
இதற்கு முன்பு, தெலங்கானாவில் மாநகராட்சித் தேர்தல் அல்லது முந்தைய ஒருங்கிணைந்த மாநிலமான ஆந்திராவில் நடைபெற்ற மாநகராட்சி இந்த அளவுக்கு கவனத்தை ஈர்த்ததில்லை. தேர்தலுக்கு முன்னதாக, பாஜகவின் உச்ச பிரச்சாரம் செய்வது இந்த முறை வித்தியாசமானதாக இருக்கிறது. பாஜக தனது மிகப் பெரிய பிரசார பீரங்கிகளை தேர்தலுக்கு முன்னதாகவே களமிறக்குகிறது.
தற்போது ஐதராபாத் மாநகராட்சில் பாஜக வெறும் 4 இடங்களை மட்டுமே கொண்டுள்ளது. கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதிக்கு (டிஆர்எஸ்) எதிராக பாஜக ஒரு முக்கிய போட்டியாளராக உருவெடுப்பது இதுவே முதல் முறை ஆகும். அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட 2016 தேர்தலை வென்ற டி.ஆர்.எஸ், 150 இடங்களில் 99 இடங்களைப் பிடித்தது. ஏ.ஐ.எம்.ஐ.எம் 44 இடங்களிலும் காங்கிரஸ் 2 இடங்களிலும் தெலுங்கு தேசம் கட்சி 1 இடத்திலும் வெற்றிபெற்றனர்.
இருப்பினும், 2016ல் இருந்து நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 2018 டிசம்பரில் நடந்த சட்டமன்றத் தேர்தலை டிஆர்எஸ் கைப்பற்றிய நிலையில், 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், அந்த கட்சி 4 முக்கியமான இடங்களை பாஜகவிடம் இழந்தது. இந்த மாத தொடக்கத்தில் டி.ஆர்.எஸ் கட்சியின் கோட்டையாகக் கருத்தப்பட்ட துபாக்காவில் நடந்த இடைத்தேர்தலில் வென்றதன் மூலம் மிகவும் தைரியமாக உள்ள பாஜக, ஐதரபாத் மாநகராட்சி தேர்தலில் அனைவரையும் வெளியேற்ற முடிவு செய்துள்ளது.
பாஜகவின் எதிரியான டி.ஆர்.எஸ்ஸை ஏ.ஐ.எம்.ஐ.எம். கூட்டனியில் இருந்து விலக்கிக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளது. இது இந்த நகரின் 44 வார்டுகளில் ஏறக்குறைய வெல்லமுடியாத பிடியைக் கொண்டுள்ளது. இதனிடையே, டி.ஆர்.எஸ், பாஜக மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகியவற்றின் உச்சபட்ச பிரச்சாரத்தால் இந்தபோட்டியில் இருந்து காங்கிரஸ் வெளியே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
பாஜகவைப் பொறுத்தவரை ஐதரபாத் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெறுவது என்பது ஒரு பெரிய கருத்தியல் போருடன் இணைக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தை அதன் முஸ்லீம் அடையாளமான ஏ.ஐ.எம்.ஐ.எம் மற்றும் ஒவைசி குடும்பத்துடன் தொடர்புள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி சண்டையை ஏ.ஐ.எம்.ஐ.எம் முகாமுக்கு கொண்டு செல்ல ஒரு வாய்ப்பை எதிர்பார்க்கிறது.
பாஜகவின் அனல் பறக்கும் பிரசாரத் தலைவர்கள் ஐதராபாத் மற்றும் ஒவைசிஸை நிஜாமின் சக்திவாய்ந்த தனியார் போராளிகளான ரசாக்கர்களுடன் இணைப்பதற்கான எந்த வாய்ப்பையும் இழக்கவில்லை. அண்மையில் பீகார் தேர்தலில் ஒவைசியின் கட்சி ஐந்து இடங்களை வென்றது உட்பட, மாநிலத்திற்கு வெளியே ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியை வளர்க்க செய்த முயற்சி - அவரது கோட்டையான ஐதராபாத்தில் சரிபார்க்கப்பட வேண்டும் என்று அக்கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.