Advertisment

‘நீங்கள் தலித் விரோதி’: கர்நாடகாவில் ராமர் கோயில் நிகழ்ச்சியில் பா.ஜ.க எம்.பி.,யை அனுமதிக்காத கிராம மக்கள்

நீங்கள் தலித் விரோதி; ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை தொடர்பான நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வந்த பா.ஜ.க.,வை எம்.பி.,யை அனுமதிக்க மறுத்து வெளியேற்றிய கிராம மக்கள்

author-image
WebDesk
New Update
Pratab simha bjp

மக்களவையில் மைசூரு-குடகு பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதாப் சிம்ஹா, சம்பவ இடத்திற்கு வந்தவுடன் அவரை வெளியேறுமாறு கிராம மக்கள் கேட்டுக் கொண்டனர். (புகைப்படம்: வீடியோவில் இருந்து Screengrab)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நடைபெற்ற கோவிலின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டு, பா.ஜ.க எம்.பி பிரதாப் சிம்ஹா திங்கள்கிழமை கிராம மக்களின் கோபத்தை எதிர்கொண்டார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: ‘You are anti-Dalit’: Villagers don’t allow BJP MP to attend temple event in Karnataka

மைசூரு மாவட்டத்தில் உள்ள ஹரோஹள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குஜ்ஜேகவுடனபுரா கிராமத்தில், கர்நாடக சிற்பி அருண் யோகிராஜால், ராம் லல்லா சிலையை செதுக்கப் பயன்படுத்தப்பட்ட கல் தொகுதி, தலித் விவசாயியான 70 வயதான ராம்தாஸ் எச் நன்கொடையாக வழங்கிய நான்கு குண்டா நிலத்தில் இருந்து, கோயில் கட்டுமானத்திற்காக வெட்டப்பட்டது.

முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.மகேஷ் மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ ஜி.டி.தேவகவுடா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் விழாவில் பங்கேற்றபோது, ​​​​ஹரோஹல்லியின் பல "மகிழ்ச்சியற்ற" கிராமவாசிகள் மக்களவையில் மைசூரு-குடகு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதாப் சிம்ஹாவின் வருகை குறித்து அதிருப்தியுடன் கேள்வி எழுப்பினர்.

முன்னாள் தாலுகா பஞ்சாயத்து உறுப்பினர் சுரேஷ் கூறுகையில், ”10 ஆண்டுகளாக கிராமத்திற்கு வந்ததில்லை, அரசியல் காரணங்களுக்காக இங்கு வந்துள்ளீர்கள். பா.ஜ.க எம்.எல்.ஏ.,க்கள் உட்பட மற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இங்கு வந்து பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் சொல்வதை நீங்கள் ஒருபோதும் காது கொடுத்து கேட்டதில்லை, நீங்கள் இங்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை,” என்று கூறினார்.

கிராமவாசியும், ராமதாஸின் உறவினருமான சுவாமி ஹரோஹல்லி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், "கிராம மக்கள் எம்.பி. மீது அதிருப்தியில் இருந்தனர்" என்று கூறினார்.

கடந்த ஆண்டு மகிஷா தசராவின் போது, ​​தலித் சமூகத்திற்கும் அதன் தலைவர்களுக்கும் எதிராக பிரதாப் சிம்ஹா பேசினார். அவரது உத்தரவின் பேரில் எங்கள் கிராமவாசிகள் சிலரும் கைது செய்யப்பட்டனர். அவர் கிராமத்திற்கு வரவோ அல்லது எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவோ அக்கறை காட்டவில்லை. ஆனால், இப்போது, ​​லோக்சபா தேர்தலுக்கு முன், அவர் திடீரென்று இங்கு வந்தார்... தவிர, ஜே.டி.(எஸ்) தலைவர்கள், பா.ஜ.க எம்.எல்.ஏ டி.எஸ்.ஸ்ரீவத்சா கூட இங்கு வந்து மக்களிடம் பேசியுள்ளனர், ஆனால் பிரதாப் சிம்ஹா இங்கு வருவதை ஒருபோதும் விரும்பியது இல்லை,” என்று ஹரோஹல்லி கூறினார்.

கிராமவாசிகளின் கோபத்தை எதிர்கொண்ட பிரதாப் சிம்ஹா அவர் வந்த சில நிமிடங்களில் அந்த இடத்தை விட்டு வெளியேறினார். ஜி.டி.தேவகவுடா மற்றும் பிற தலைவர்கள் கிராம மக்களை சமாதானப்படுத்த முயன்றும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதாப் சிம்ஹா, ”சில காங்கிரஸார்களால்தான் குழப்பம் ஏற்பட்டது. நான்கு தவறான நபர்கள் குழப்பத்தை உருவாக்கினர், அவர்கள் காங்கிரஸ் தொண்டர்கள். நான் இப்போதும் மகிஷா தசராவுக்கு எதிரானவன். இந்த லோக்சபா தேர்தலில் காங்கிரசால் என்னை தோற்கடிக்க முடியாது அதனால் தான் இப்படி நாடகம் ஆடுகின்றனர். இவை அனைத்திற்கும் நான் பயப்பட மாட்டேன், ”என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Karnataka Dalit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment