நாடாளுமன்ற மக்களவையில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 81வது ஆண்டு விழாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசினார்.
அப்போது அவர், “இந்தியா தற்போது தகுதியை விரும்புகிறது: தகுதியானவர்களை விரும்புகிறது. வாரிசுகளை அல்ல” என்றார்.
தொடர்ந்து, “இந்திய நாட்டு மக்கள் வெள்ளையளை வெளியேற்றியபோல் ஊழல், வாரிசு அரசியலை வெளியேற்ற விருமபுகின்றனர்” என்றார்.
பின்னர் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பேசிய அவர், “இந்த விவகாரம் தொடர்பான விவாதத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் ஒடிவிட்டன.
ஆனால் நாங்கள் ஓடவில்லை. மணிப்பூர் குறித்து விவாதிக்க வாருங்கள் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பலமுறை கூறினார்கள். ஆனால் அவர்களை காணவில்லை” என்றார்.
தொடர்ந்து ராகுல் காந்தியின், “கொலை செய்யப்பட்ட இந்தியா” என்ற பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவரின் பேச்சுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் மேசையை தட்டியதை நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது” என்றார்.
ஸ்மிருதி இரானிக்கு சற்று முன் பேசிய காந்தி, "மணிப்பூர் முதல் நூஹ் வரை, நீங்கள் முழு நாட்டையும் தீயிட்டுக் கொளுத்திவிட்டீர்கள்" என்றார்.
மேலும், “பாஜகவின் அரசியல் மணிப்பூரில் இந்தியாவை படுகொலை செய்துள்ளது… பாஜக தேச விரோதமானது” என்றார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய இரானி, “காங்கிரஸ் ஆட்சியின்போது நிகழ்ந்த 1984 சீக்கியர்கள் மீதான தாக்குதல்கள், காஷ்மீர் பண்டிட்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்துப் பேசினார்.
மேலும், “காங்கிரஸ் ஆட்சியின் வரலாறு ரத்தம் படிந்தது” என வாதிட்டார். தொடர்ந்து, “ராகுலை பெண்ணிய விரோதி என வர்ணித்த இரானி, பறக்கும் முத்தம் கொடுத்த செயல் கண்ணியம் இல்லாதது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“