நிபா வைரஸால் உயிரிழந்த லினியின் கடைசி நிமிடங்கள்!!!

கேரளாவில் நிபா வைரஸால் உயிரிழந்த செவிலியர் லினியின் கடைசி நிமிடங்களை அவரின் கணவர் உருக்கத்துடன் பகிர்ந்துள்ளார்.

கேரளாவில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் இதுவரை 10  உயிர்களை பலி வாங்கியுள்ளது. அதில்,  லினி என்ற நர்ஸும் ஒருவர். தான் பணிபுரியும் மருத்துவமனையில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வந்த நால்வருக்கு இரவும், பகலுமாக  சிகிச்சை பார்த்த லினியையும் கடைசியில் நிபா வைரஸ் தாக்கியது.

இதனால், அவஎர், நேற்று காலை  மரணம் அடைந்தார். அவரின்  மரணம்  குடும்பத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் பெரும் சோகம் என்னவென்றால், நோய் பரவ வாய்ப்புள்ளதால் லினியின் உடலை  அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கவில்லை.

தன்னலமற்று சேவைபுரிந்த லினியின் உடல் யார் கண்ணிலும் காட்டப்படாமல் வெஸ்ட் ஹில் மயானத்தில் எரியூட்டப்பட்டது கேட்பவர்களின் கண்களிலும் கண்ணீர் வர வைத்துள்ளது.  லினியின் கணவர் சஜீஷ், பஹரைன் நாட்டில் பணிபுரிந்து வந்தார். மனைவியின் இறப்பு செய்தியைக் கேட்டு அழுதுக்  கொண்டே  அவர் வந்து கதறியது அங்கிருந்தவர்களை கண்ணீரில் ஆழ்த்தியது.

மற்றொரு பக்கம், லினியின் மகன்களான ஐந்து வயதுடைய ரிதுல், இரண்டு வயதுடைய சித்தார்த் இருவரும் `அம்மா, நைட் டூட்டிக்குப் போயிருக்காங்க’ என நினைத்துக்கொண்டிருக்கின்றனர். தாய் இறந்தது தெரியாமல் குழந்தைகள் வழக்கம்போல் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். ”அவர்களிடம்  எப்படி நிபா வைரஸ் லினியின் உடலை பறி விட்டது என்று சொல்வேன், அப்படி சொன்னால் மட்டும் அவர்களுக்கு புரிந்து விடுமா? ” என்று கதறி அழுதுகிறார்  சஜீஷ்.

தனது கணவனுக்கு  லினியின் எழுதியுள்ள கடிதம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், “ சாஜி சேட்டா, எனது முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் உங்களைப் பார்க்க முடியும் என்ற நம்பிக்கைகூட எனக்கு கிடையாது. என்னை மன்னிக்கவும். நமது குழந்தைகளை பத்திரமாகப் பார்த்து கொள்ளுங்கள்.  விவரமறியா அந்த குழந்தைகளை உங்களுடன் வளைகுடா நாட்டுக்கே கூட்டி சென்றுவிடவும். நமது தந்தையைப் போல் அவர்களும் தனியாக இருக்கக்கூடாது ” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close