கொரோனா பரவலுக்கு தப்லீக் ஜமாத் மாநாடே காரணம் – பிரச்சாரம் செய்த இளைஞர் சுட்டுக் கொலை!

கொரோனா வைரஸ் நாட்டில் பரவ ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தப்லீக் ஜமாத் மாநாடு தான் காரணம் என்றும் குற்றம் சாட்டியதாக உள்ளூர்வாசிகள் கூறினார்கள் என்று பிரயாகராஜ் காவல்துறை அதிகாரி அமித் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்

Youth accuses Tabhligi Jaamat of spreading coronavirus, shot dead
Youth accuses Tabhligi Jaamat of spreading coronavirus, shot dead

கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமே டெல்லியில் தப்லீக் ஜமாத் நடத்திய மாநாடுதான் என உத்தரப்பிரதேசத்தில் பிரச்சாரம் செய்த இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

டெல்லியில் தப்லீக் ஜமாத் நடத்திய மாநாட்டில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா தொற்று நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பதிவாகியுள்ள மொத்த பாதிப்பான 485ல் 437 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தான்.

ஸ்டாலினிடம் செல்போன் மூலம் உடல்நலம் விசாரித்த பிரதமர் மோடி, அமித் ஷா

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் பிரக்யாராஜில் இளைஞர் ஒருவர் தமது பகுதியில் தப்லீக் ஜமாத் மாநாட்டினால்தான் இந்தியாவில் கொரோனா பரவியது என பிரசாரம் செய்து வந்திருக்கிறார். இவர் தமது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் துப்பாக்கிக் குண்டுகள் தலையில் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அந்த நபர் உயிரிழந்தார். இச்சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.


அந்த நபர், கொரோனா வைரஸ் நாட்டில் பரவ ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தப்லீக் ஜமாத் மாநாடு தான் காரணம் என்றும் குற்றம் சாட்டியதாக உள்ளூர்வாசிகள் கூறினார்கள் என்று பிரயாகராஜ் காவல்துறை அதிகாரி அமித் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.

சர்ச்சை பாதி; பாராட்டு மீதி: யார் இந்த பீலா ராஜேஷ் ஐஏஎஸ்?

உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, “அந்த நபர் தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அவரது தலையில் ஒரு புல்லட் தாக்கப்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்” என்று பதிவு செய்ததாக அமித் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.

காவலில் எடுக்கப்பட்டுள்ள அந்த இரு நபர்களிடமும் விசாரிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Youth accuses tabhligi jaamat of spreading coronavirus shot dead

Next Story
ஒரு அதிகாரி உட்பட 3 ராணுவ வீரர்கள் வீர மரணம்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com