/indian-express-tamil/media/media_files/2024/10/20/82wDSzPPe2vRyxgABlDG.jpg)
புதுச்சேரியில் சாலையை கடப்பது போல் சென்று ஓடும் பேருந்தின் பின் சக்கரத்தில் விழுந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் சாலையை கடப்பது போல் சென்று ஓடும் பேருந்தின் பின் சக்கரத்தில் விழுந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் தொழிற்சாலைகள், கனரக வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளதால் நாள்தோறும் அதிக அளவு வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்கின்றன. இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் உள்ள சாலையாக இது உள்ளது.
இந்த நிலையில், அந்த சாலையில் இன்று பிற்பகல் ஓடும் பேருந்தின் பின் சக்கரத்தில் விழுந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிசிடிவி காட்சியில் வெளியான பதிவில், சாலையின் ஓரமாக நடந்து சென்ற வாலிபர் சாலையை கடப்பது போல நின்றிருந்த நிலையில், வேகமாக வந்த பேருந்து கீழ் சக்கரத்தில் விழுந்து தற்கொலை முயற்சி செய்கிறார். இதில் பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடத்திய விசாரணையில் நாகப்பட்டினம், தர்மானபுரம் பகுதியை சேர்ந்த துப்புரவு தொழிலாளி அரவிந்த்சாமி (30) என்பதும், கடந்த மூன்று நாட்களாக புதுச்சேரியில் தங்கி மது அருந்தி வந்துள்ளதாக தெரிகிறது. இவருக்கு திருமணம் ஆகவில்லை வேண்டும் அந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.