கிரிக்கெட் விளையாடும் போது மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர் மரணம்!

லாயிட் அந்தோணி அங்குள்ள கல்லூரியில் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். மைதானத்தில் அவர், மயங்கி விழுந்த காட்சிகள் அங்கிருந்த கேமராவில் பதிவிவாகியுள்ளது.

ஐதராபாத்தில் இளைஞர் ஒருவர் கிரிக்கெட் விளையாடும் போது மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் தனியார் நிறுவனங்கள் நடத்தும் கிரிக்கெட் போட்டிகள் அடிக்கடி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நேற்று உள்ளூர் பகுதிகளை சேர்ந்த கிரிக்கெட் அணிக்களுக்கான கிரிக்கெட் போட்டி அங்குள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்றது. இந்த போட்டியில், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த கிரிக்கெட் அணிகள் தங்கள் அணிக்கான பெயரை பதிவு செய்துக் கொண்டு போட்டியில் பங்கேற்றனர். அப்போது, லாயிட் அந்தோணி என்ற இளைஞர் பந்து வீச்சாளராக களம் இறங்கினார்.

எதிரணி விளையாடும் போது, வேகமாக ஓடி வந்து பந்தை வீசும் நேரத்தில் திடீரென்று அந்தோணி மைதானத்தில் மயங்கி விழுந்தார். இதனை கண்ட அவரின் அணியை சேர்ந்த மற்ற வீரர்கள் அவரைத் தூக்கி, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அந்தோணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், மாரடைப்பால் வரும் வழியிலியே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

லாயிட் அந்தோணி அங்குள்ள கல்லூரியில் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் கொண்ட ஈடுப்பாடு காரணமாக அவர், இதுப்போன்ற உள்ளூர் போட்டிகளில் கலந்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். மைதானத்தில் அவர், மயங்கி விழுந்த காட்சிகள் அங்கிருந்த கேமராவில் பதிவிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றனர். கிரிக்கெட் விளையாடும் போதே அந்தோணி உயிரிழந்த சம்பவம் அவரின் குடும்பத்தாரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close