ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி (YSRTP) கட்சியின் தலைவர் ஒய் எஸ் ஷர்மிளாவை ஞாயிற்றுக்கிழமை மகபூபாபாத் மாவட்டத்தில் தெலுங்கானா போலீசார் தடுத்து நிறுத்தி அவரது பிரஜா பிரஸ்தானம் பாத யாத்திரைக்கு அளித்த அனுமதியை ரத்து செய்தனர். மூன்று மாதங்களுக்குள் அவர் கைது செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா, பாத யாத்திரையின் போது, கட்சி எம்எல்ஏ பனோத் ஷங்கர் நாயக் குறித்து தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததாக பாரத் ராஷ்டிர சமிதி (BRS) கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பாரத் ராஷ்டிர சமிதி கட்சியினர் அளித்த புகார்களின் அடிப்படையில், ஷர்மிளா மீது பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
முன்னதாக வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நர்சம்பேட்டை சட்டமன்ற உறுப்பினரான டிஆர்எஸ் எம்எல்ஏ பி சுதர்சன் ரெட்டி மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியதற்காக வாரங்கலில் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியினர் நவம்பர் 28 ஆம் தேதி அவரது கான்வாய் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து அவர் தடுத்து வைக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மறுநாள், ஷர்மிளா, முதல்வரின் இல்லம் மற்றும் அலுவலகமான பிரகதி பவனில் போராட்டம் நடத்த முயன்றபோது தடுத்து வைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். ஜெகன் மோகன் ரெட்டி அங்கு இருந்தபோதும், ஷர்மிளாவின் காரை போலீசார் இழுத்துச் சென்றதால் இந்த சம்பவம் அப்போது பெரிதாக பேசப்பட்டது.. ஒய்.எஸ்.ஆர்.டி.பி தொண்டர்கள் பலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அசைய மறுத்த ஷர்மிளாவின் ஆதரவாளர்கள் பலரையும் பெண் காவலர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அன்று இரவு உள்ளூர் நீதிமன்றத்தால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
டிசம்பர் 9 ஆம் தேதி, ஹைதராபாத் லோட்டஸ் பாண்ட் பகுதியில் உள்ள ஒய்எஸ்ஆர் இல்லத்தில் தனது மாநிலம் தழுவிய பாத யாத்திரையைத் தொடர அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த ஷர்மிளா முடிவு செய்தார், ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து போலீசார் அவரை மருத்துவமனைக்கு மாற்றினர். அவர் “கட்டாயமாக” மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக அவரது கட்சியினர் குற்றம் சாட்டினர்.
பாதயாத்திரையின் நோக்கம்
ஆந்திராவில் ஆட்சியில் இருக்கும் ஒய்எஸ்ஆர்சிபி கட்சிக்கு அவரது சகோதரர் தலைமை தாங்கும் நிலையில், தெலுங்கு தேசம் கட்சி, ஜன சேனா கட்சி, பிஜேபி மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு மத்தியில் தனக்கென எந்த அரசியல் இடத்தையும் காணாததால், ஷர்மிளா தெலுங்கானா கட்சிக்கு மாறினார்.
48 வயதான அவர் ஜூலை 8, 2021 அன்று YSRTP கட்சியை நிறுவினார். அக்டோபர் 20, 2021 அன்று, தெலுங்கானாவின் 33 மாவட்டங்கள் முழுவதும் செவெல்லாவிலிருந்து பாதயாத்திரையைத் தொடங்கினார்.
ஆந்திராவில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அவரது சகோதரரும் வாக்காளர்களை இணைக்க மாநிலம் தழுவிய பாத யாத்திரையை மேற்கொண்டார்.
ஷர்மிளா தெலுங்கானா வழியாக ஏராளமான பின்தொடர்பவர்களுடன் அணிவகுத்தார், அவர்களில் பெரும்பாலோர் முன்னாள் ஒய்எஸ்ஆர் விசுவாசிகள். மார்ச் 5 ஆம் தேதி கம்மம் மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் (Palair) பாதயாத்திரை நிறைவு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“