டெல்லி ரகசியம்: பாஜக பக்கம் சாய்ந்ததா ஜெகன் மோகன் அரசு… சிறுத்தையை தடுத்த ஒமிக்ரான்!

ஓய். எஸ். ஆர்., காங்கிரஸ் கட்சி தலைவர் விஜய்சாய் ரெட்டி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துடன் இருக்கும் படங்களை ட்வீட் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய். எஸ். ஆர்., காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள், பாஜகவினருடன் நெருக்கமாக இருப்பதை காணமுடிந்தது. 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் மாநிலங்களவையில் ஏற்பட்ட பிரச்சனையை சரிசெய்ய அக்கட்சியின் தலைவர்கள் மத்தியஸ்தம் செய்ய முயன்றனர்.

ஓய். எஸ். ஆர்., காங்கிரஸ் கட்சி தலைவர் விஜய்சாய் ரெட்டி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துடன் இருக்கும் படங்களை ட்வீட் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதில், இன்று டிசம்பர் 27, 2021 அன்று நர்சபுரத்தில் நடந்த ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் சர்சங்கசாலக் மோகன்பாவத்துடன் நடந்தி மரியாதைக்குரிய சந்திப்பு. அவரது ஆசீர்வாதத்தை பெறுவதற்கும், வழிகாட்டுதலின் வார்த்தைகளை கேட்பதற்கும் அருமையான வாய்ப்பு கிடைத்தது” என பதிவிட்டுள்ளார். இரு கட்சிகளுக்கும் இடையே வளர்ந்து வரும் நெருக்கம் குறித்து, பாஜக மேலிடம் மகிழ்ச்சி தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஆளும் ஓய். எஸ். ஆர்., காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள் சிலருக்கு, இந்த நடவடிக்கை பிடிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுத்தையை தடுத்த ஒமிக்ரான்

கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாடு, நாட்டில் சிறுத்தையை மீண்டும் அறிமுகப்படுத்தும் மையத்தின் லட்சியத் திட்டங்களை நிறுத்தியுள்ளது. இந்தியாவில் சிறுத்தையின் எண்ணிக்கை விளிம்பில் உள்ளதால், தென் ஆப்பிரிக்காவில் இருந்து சிறுத்தை இடமாற்றம் செய்திட மத்திய அரசு முடிவு செய்திருந்தது. நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து இரண்டு குழுக்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வன அதிகாரிகளுக்கு சிறுத்தை மேலாண்மையில் பயிற்சி அளிக்க இந்தியாவிற்கு வருகை தந்தன

ஆனால், ஒமிக்ரான் மாறுபாடால் தென் ஆப்பிரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், சிறுத்தை இடமாற்றம் மீண்டும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியா போஸ்ட்டில் சத்தான உணவு விதைகள்

போஷன் அபியான் திட்டத்தின் கீழ் சத்தான உணவுகள் விளைவதை அதிகரிப்பதற்காக, இந்தியா போஸ்ட் மூலம் ஒரு தனித்துவமான திட்டத்தை மேற்கொண்டது. தேசிய விதைகள் கழகம் லிமிடெட் மற்றும் இந்திய போஸ்ட் உதவியின் மூலம் இந்தாண்டு 10.5 லட்சம் “காய்கறி கிட்களை” அமைச்சகம் விநியோகித்துள்ளது. விதைகள் நிச்சயம் நடப்படும் என்ற நம்பிக்கையில், சமையலறை தோட்டங்களை மேம்படுத்தும் திட்டத்திற்கு உயரதிகாரிகள் மற்றும் குறிப்பிட்ட அங்கன்வாடி மையங்களை அமைச்சகம் தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ysrcp mp seemed closest to the bjp in the just concluded winter session of parliament

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com