பிரபல பாலிவுட் முன்னாள் நடிகை ஜீனத் அமன் தொழிலதிபர் ஒருவர் மீது, பாலியல் தொல்லை தருவதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
பாலிவுட் சினிமாவில் 1980 களில் வெளிவந்த படங்களில் நடித்து, தனக்கென தனி ரசிகர்களை பெற்றவர், நடிகை ஜீனத் அமன். முன்னாள் நடிகையான இவர், தற்போது சினிமாவில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில், இவர் தொழிலதிபவர் ஒருவர் தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வருவதாக மும்பை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதுக்குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மும்பை காவல் துறையினர், விசாரணையில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில், நடிகை ஜீனத் அமன், குற்றம்சாட்டப்பட்டுள்ள தொழிலதிபருடன் நண்பராக இருந்ததும், இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், நடிகை ஜீனத் அமன் அவரை விட்டு சமீபத்தில் பிரிந்து சென்றது தெரிய வந்துள்ளது. அதன்பின்பு, அந்த தொழிலதிபரோ தொடர்ந்து ஜீனத்துக்கு தொலைபேசி வாயிலாக தொடர்ந்து தொல்லைகள் கொடுத்துள்ளார்.
ஜீனத் செல்லும் இடம்மெல்லாம் அவரைப் பின் தொடர்ந்து, தொந்தரவு செய்யதாகவும் கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த ஜீனத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவர் அளித்துள்ள புகாரின் பேரில், தொழிலதிபர் மீது சட்டப்பிரிவு 304 மற்றும் சட்டப்பிரிவி 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.