அவசர பயன்பாட்டு அனுமதிக்காக காத்திருக்கும் ஜைடஸ்; உள்நாட்டில் உருவான 2-வது தடுப்பூசி வெற்றி பெறுமா?
வெற்றி பெற்றால், பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அடுத்த படியாக தடுப்பூசிகளை தயாரிக்கும் உள்நாட்டு நிறுவனமாக இருக்கும். இது தற்போது இந்தியாவில் நிலவி வரும் தடுப்பூசி தட்டுப்பாட்டினை குறைக்க பல்வேறு வகையில் உதவும்.
Zydus Cadila applies for emergency use : இந்தியாவில் மருந்து உற்பத்தியாளராக இருக்கும் ஜைடஸ் காடிலா (Zydus Cadila (CADI.NS)) தயாரித்துள்ள தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதிக்க கோரிக்கை வைத்துள்ளதாக வெள்ளிக்கிழமை கூறியுள்ளது. இடைக்கால மதிப்பாய்வில் கொரோனா தொற்றுக்கு எதிராக 66.6% செயல்திறனை இந்த தடுப்பூசி வெளிப்படுத்தியுள்ளது.
Advertisment
இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படும் எனில், இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இரண்டாவது தடுப்பூசி என்ற பெயரை பெறும் மேலும். கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையை நீக்க இது பெரிய அளவில் உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இருந்த மோசமான கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. இருப்பினும் மூன்றாம் அலைக்கான வாய்ப்புகளை எச்சரித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். கொரோனா தொற்றுக்கு எதிராக பரவலாக்கப்பட்ட தடுப்பூசி மிகப்பெரிய பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மூன்று நிலைகளை கொண்டுள்ள இந்த தடுப்பூசி, சோதனை நடத்தப்பட்ட 28 ஆயிரம் நபர்களுக்கு (12 - 18 வயதிற்கு உட்பட்டவர்கள் 1000 பேர் உட்பட) பாதுகாப்பு மற்றும் செயல்திறனை வழங்கியதாக சோதனை முடிவுகள் கூறுகின்றன. இரண்டு-டோஸ் விதிமுறைகளையும் மதிப்பீடு செய்வதாக கூறியுள்ள இந்நிறுவனம் குறுகிய கால நோயெதிர்ப்பு முடிவுகள் மூன்று-டோஸ் விதிமுறைகளுடன் ஒப்பிடத்தக்கவையாக உள்ளது என்றும் கூறியுள்ளது. இது தடுப்பூசியின் முழு கால அளவைக் குறைக்க மேலும் உதவும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு 120 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது.
ZyCoV-D தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் ஐந்தாவது தடுப்பூசியாக இது இருக்கும். ஏற்கனவே மாடர்னா, அஸ்ட்ரஜெனாகா (கோவிஷீல்ட்), பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் மற்றும் ரஷ்யாவின் கமாலெயா நிறுவனம் உற்பத்திய செய்த தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் இந்த ஆய்வு COVID-19 இன் இரண்டாவது அலையின் உச்சத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாகவும், புதிய பிறழ்வு வகைகளுக்கு எதிராக குறிப்பாக டெல்டா மாறுபாடுக்கு எதிராக தடுப்பூசியின் செயல்திறனை மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் ஜைடஸ் கூறியுள்ளது. . இருப்பினும், அந்த மாறுபாடுகளுக்கு எதிரான செயல்திறன் விகிதத்தை ஜைடஸ் நிறுவனம் வெளியிடவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil