வங்கதேசத்தில் சரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில் மோதியதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமுற்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கிஷோர்கஞ்சில் இருந்து டாக்கா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் மாலை 4:15 மணியளவில் சரக்கு ரயில் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதுவரை பதின்மூன்று உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, பைரப் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரியை மேற்கோள் காட்டி bdnews24 தெரிவித்துள்ளது.
மேலும் அதில் சேதமடைந்த பெட்டிகளுக்கு அடியில் பலர் சிக்கியுள்ளதாக செய்தி இணையதளம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் வாசிக்க : 13 killed, several injured in train accident in Bangladesh
முதல்கட்ட அறிக்கையில், சரக்கு ரயில் இரண்டு பெட்டிகளைத் தாக்கியதில் பின்னால் இருந்து எகாரோ சிந்தூர் மீது மோதியதாக டாக்கா ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் அனோவர் ஹொசைன் தெரிவித்தார்.
இந்த விபத்து வங்கதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“