கனாடாவில் பதற்றம்: இந்திய ஹோட்டலில் குண்டு வெடிப்பு

விபத்து மூலம் 10 பேர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் உள்ள இந்திய ஹோட்டலில் குண்டு வெடித்தலில் 15 க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒன்டாரியோ நகரிலுள்ள மிச்சிசாகுவா பகுதியிலுள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் ‘பாம்பே பேல்’ என்ற பெயரில், இந்திய ரெஸ்டாரண்ட் இயங்கி வருகிறது.இங்கு அதிகமான கனடா வாழ் தமிழர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இந்த ரெஸ்டாரண்டில் நேற்று(24.5.18) இரவு 10.30 மணியளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

இந்த குண்டி வெடிப்பில் தொடர்புடைய 2 நபர்களின் முகங்கள் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம், விபத்து மூலம் 10 பேர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், குண்டி வெடிப்பு நிகழ்ந்த போது நடந்தவற்றை அதை நேரில் பார்த்தவர்கள் பதற்றத்துடன் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பது, “ இன்னும் எங்களால் அதை மறக்க முடியவில்லை. வழக்கம் போல் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். திடீரென்று அதிவேக சத்தத்துடன் குண்டு வெடித்தது.சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டுக்கள் மேலே பறந்தன. நாங்கள் எல்லோரும் அலறி அடித்துக் கொண்டு, குழந்தைகளை அழைத்துக் கொண்டு மறைவான இடத்தில் ஓடி மறைந்தோம்” என்று கூறியுள்ளனர்.

×Close
×Close