Advertisment

நேபாளத்தில் விமான விபத்து: 18 பேர் மரணம்: விபத்திலிருந்து தப்பிய விமானிக்கு தீவிர சிகிச்சை

நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போது விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது. விமானத்தில் பயணித்த 18 பேர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

author-image
WebDesk
New Update
sasa

நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போது விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது. விமானத்தில் பயணித்த 18 பேர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

Advertisment

இரண்டு விமான பணியாளர்கள் மற்றும் 17 தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பராமரிப்பு சோதனைகளுக்காக பொக்காரா நகருக்குச் சென்றதாக விமான நிலைய பாதுகாப்புத் தலைவர் அர்ஜுன் சந்த் தாக்குரி ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். 

விபத்திலிருந்து விமானி மனிஷ் ஷாங்க்யா மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தலையில் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். நேபாள ராணுவத்தின் தலைமையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விமானத்தில் தீப்பிடித்ததாகவும்,  ஆனால் அவசர உதவியாளர்களால் தீ விரைவாக அணைக்கப்பட்டது என்று  தகவல் வெளியிகி உள்ளது. 

விபத்தை நேரில் கண்ட சாட்சிகளின்படி, விமானம் புறப்படும்போது இறக்கையின் முனை தரையில் மோதியதால் விமானம் கவிழ்ந்தது. விமானம் உடனடியாக தீப்பிடித்து ஓடுபாதையின் கிழக்குப் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.



அந்த விமானம் உள்ளூர் சௌர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது என ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஃப்ளைட் ரேடார் 24 படி, சௌர்யா நேபாளத்தில் உள்நாட்டு விமானங்களை இரண்டு பாம்பார்டியர் சிஆர்ஜே-200 பிராந்திய ஜெட் விமானங்களுடன் இயக்குகிறார், இரண்டு விமானங்களும் 20 வருடங்கள் பழமையானது. 

கடந்த ஆண்டு ஜனவரி மாதம், நேபாளத்தின் சுற்றுலா நகரமான பொக்ராவில் தரையிறங்குவதற்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் ஐந்து இந்தியர்கள் உட்பட 72 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Read in english 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment