செருப்பை கழட்டி கையில் எடுத்து கொண்டு விருது விழாவில் பங்கேற்ற பிரபல நடிகை!

பிரான்ஸில் நடைப்பெற்ற  கேன்ஸ் திரைபட விருது விழாவில்   பிரபல நடிகை கிறிஸ்டன் ஸ்டிவார்ட்   தான் அணிந்திருந்த  செருப்பை கழட்டி கையில் எடுத்துக் கொண்டு ஓடிய புகைப்படம்  சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஆண்டுந்தோறு நடைபெறும் பிரபல கேன்ஸ் திரைப்பட விழா,  இந்த  ஆண்டு பிரான்ஸில் நடைப்பெற்றது. 71 ஆவது ஆண்டில் காலெடி வைத்து இந்த விழாவில் பாலிவுட்,  ஹாலிவுட்டில் இருக்கும்  நடிகர், நடிகையர் பலர் கலந்துக் கொள்வார்கள்.  அந்த வகையில் இம்முறை இந்தியாவை சேர்ந்த  நடிகை ஐஸ்வர்யா ராய், திபீகா படுகோனே, மல்லிகா ஷெரவாத் என பலர் கலந்துக் கொண்டனர்.,

ஐஸ்வர்யா ராய் சென்ற வருடம் போல் இம்முறையும் தனது செல்ல மகளான ஆராத்யா வுடன்   கலந்துக் கொண்டார். சிவப்பு கம்பள வரவேற்பில் பர்பிள் நிறத்தில்   ஐஸ்வர்யா ராய் பட்டாம்பூச்சி  கவுன் அணிந்து வந்திருந்தது பலரையும் கவர்ந்திருந்தது.  அவரின் ஆடை குறித்து தான் இணையதளத்தில் ஏகப்பட்ட செய்திகள் வெளிவந்தன,

இந்நிலையில் அதே கேன்ஸ் பட விழாவில் நடந்த மற்றொரு நிகழ்வும் தற்போது வைரலாகி உள்ளது.  பிரபல ஹாலிவுட் நடிகை கிறிஸ்டன் ஸ்டிவாட்டும்  கேன்ஸ் படவிழாவில் கலந்துக் கொண்டார்.  சிவப்பு கம்பள வரவேற்பின் போது அவர் க்ரேப் நிற ஆடையில் நீளமான காலணிகளை அணிந்து வந்திருந்தார்.

அப்போது திடீரென்று அங்கு மழை பெய்ய ஆரம்பித்தது. இதை சற்றும் எதிர்ப்பார்க்காத அவர், முதலில் ஓட முயற்சித்தார். ஆனால் பெரிய காலணிகளால் கீழே விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் உடனே, தனது காலில் அணிந்திருந்த காலணிகளை கழட்டி கையில் எடுத்துக் கொண்டு  படிகட்டுகளில் வேக வேகமாக ஓடினார்.

 

இதனை அங்கிருந்த புகைப்பட கலைஞர்கள் விடாமல் புகைப்படம் எடுத்தனர்.   இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.  அவ்வளவு பெரிய நிகழ்ச்சியில், யாரும் எதிர்ப்பார்க்காமல் செருப்பை கழட்டி கையில் எடுத்துக் கொண்டு கிறிஸ்டன் ஸ்டிவார்ட் ஓடியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

#kristenstewart #cannes

A post shared by @ kristen.inspiration on

 

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close