சிங்கப்பூரில் சுமார் 250 இந்தியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்திய உயர்மட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சிங்கப்பூரில் 250 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வெளிநாட்டினருடன் தொடர்பில் இருந்தவர்கள். கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இந்தியர்கள் அனைவரது உடல் நிலையும் சீராக உள்ளது" என்று தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி மனிதாபிமானம் மிக்க சிறந்த மனிதர் - பாராட்டு பத்திரம் வாசிக்கும் டிரம்ப்
சிங்கப்பூரில் வியாழக்கிழமை அதிகபட்சமாக 287 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் சிங்கப்பூரில் கொரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,910 ஆக அதிகரித்துள்ளது. 6 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.
சிங்கப்பூரில் ஒருமாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் சில நாட்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், சிங்கப்பூரின் வளர்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்பைக் குறிப்பிட்டு பாராட்டிய பிரதமர் லீ சியன் லூங், வெளிநாட்டு ஊழியர்களின் நலனை கண்காணித்து வருவதாகவும் இயன்ற அனைத்தையும் செய்து, அவர்களது நலனை கவனித்துக்கொள்வோம் என்றும் கூறியுள்ளார்.
இன்று (ஏப்ரல் 10) ஃபேஸ்புக் வழியாக அவர் ஆற்றிய உரையில், "சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று அதிகமாக 287 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள்.
ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுவதையும், அவர்கள் குடும்பங்களுக்குப் பணம் அனுப்புவதையும் உறுதிசெய்யவும் அவர்களின் முதலாளிகளுடன் இணைந்து செயல்படுகிறோம். தேவையிருப்பின், அவர்களுக்கு மருத்துவப் பராமரிப்பும் சிகிச்சையும் வழங்குவோம்.
கொரோனாவுக்கு பின் வறுமை உறுதி : இந்தியாவில் 40 கோடி மக்களின் நிலை என்ன?
சிங்கப்பூரில், உங்களது மகன்கள், தந்தைகள், கணவர்கள் ஆகியோரின் உழைப்பையும் பங்களிப்பையும் நாங்கள் போற்றுகிறோம். அவர்களது நலனில், எங்களுக்குப் பொறுப்பு உள்ளதை நாங்கள் உணர்கிறோம். நாங்கள், எங்களால் இயன்ற அனைத்தையும் செய்து, அவர்களது சுகாதாரம், வாழ்வாதாரம், நலன் ஆகியவற்றை இங்குக் கவனித்துக்கொள்வோம்; உங்களிடம் பத்திரமாகத் திரும்பி வரச் செய்வோம். அனைத்து சிங்கப்பூரர்களின் சார்பாக, நீங்கள் நலமுடன் இருக்க நான் வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், சீனா ஆகிய நாடுகள் கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை - 1,639,763
உயிரிழந்தோர் எண்ணிக்கை - 100,156
உடல் நலம் பெற்றோர் - 369,017
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”