ஆஸ்திரேலியாவின் வடக்குப்பகுதியில் உயிரியல் பூங்காவிற்கு அருகே உள்ள நெடுஞ்சாலை பகுதியில் மூன்று கண்கள் கொண்ட பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவெனில், மார்ச்சில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாம்பு, சில வாரங்களுக்கு முன் மரணமடைந்து விட்டது.
இதுதொடர்பாக, ஆஸ்திரேலியாவின் வடக்கு மாகாண ங்கா மற்றும் வனவிலங்குகள் சேவை அமைப்பு தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த அரிதான முக்கண் பாம்பிற்கு தாங்கள் Monty Python என்று பெயர் சூட்டியிருந்தோம், ஆனால், கண்டுபிடித்த சில நாட்களிலேயே அது மரணித்தது மிகுந்த கவலையளிக்கிறது.
பாம்பு பல ஆர்வலர், இந்த முக்கண் பாம்பு குறித்து கூறியதாவது, இந்த அரிதான நிகழ்வு இயற்கையான திடீர்மாற்றத்தின் விளைவாக நிகழ்ந்துள்ளது. இந்த அரிய பாம்பு, 40 செ.மீ. ( 15 இஞ்ச்) நீளம் கொண்ட இந்த பாம்பால், சரியாக உணவு உண்ண முடியாததால், விரைவிலேயே மரணத்தை தழுவ நேரிட்டது.
அந்த பாம்பின் எக்ஸ்ரே படத்தை ஆய்வு செய்தபோது, அதன் மண்டை ஓட்டில் இரண்டு கண்களுக்கு பதிலாக மூன்று கண்களும், அம்மூன்றுமே செயல்பட்டு கொண்டிருந்தது என்பது கூடுதல் தகவல்.
இந்த முக்கண் பாம்பு குறித்த பேஸ்புக் பதிவு,இதுவரை 14 ஆயிரத்திற்கும் மேல் நெட்டிசன்களால் ஷேர் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.