இலங்கையின் முன்னாள் அதிபரைக் கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூன்று தமிழ் கிளர்ச்சியாளர்கள் மன்னிக்கப்பட்டு திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டதாக இலங்கை அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்த இனப் போரின் போது, 1999 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, ஒரு கொடிய தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடந்தது.
கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கலந்துக் கொண்ட கூட்டத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் சந்திரிகா குமாரதுங்க அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார், ஆனால் அவரது வலது கண்ணை இழந்தார். இந்த குண்டுவெடிப்பில் பத்திரிகையாளர்கள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த 3 தமிழர்கள் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.
22 வருடங்களாக சிறையில் இருந்த கொலையாளிகளுக்கு மன்னிப்பு வழங்க சந்திரிகா குமாரதுங்க இணங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், அவரது சம்மதத்தைப் பெற்ற பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டனர், என்று அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்க 1999 தேர்தலில் சந்திரிகா குமாரதுங்கவின் பிரதான போட்டியாளராக இருந்தார். சந்திரிகா தொலைக்காட்சியில் கண்ணில் ஏற்பட்ட காயங்களுடன் தோன்றி வெற்றி பெற்றார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் மேலும் ஐந்து முன்னாள் தமிழ்ப் புலிகளும் விரைவில் நீண்ட தண்டனையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச ரீதியில் விமர்சிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய சட்டமான PTA, சந்தேக நபர்களை நீதிமன்ற மறுஆய்வு மற்றும் கட்டாய வாக்குமூலங்களின் அடிப்படையில் தண்டனை வழங்காமல் நீண்ட காலத்திற்கு காவலில் வைக்க அனுமதிக்கிறது.
1972 மற்றும் 2009 க்கு இடையில் 1,00,000 க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகு, அடுத்தடுத்த அரசாங்கங்கள் அரசியல் எதிரிகளை காவலில் வைக்க பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 75 க்கும் மேற்பட்ட தமிழர்கள் முறையாக குற்றஞ்சாட்டப்படாமல் பல தசாப்தங்களாக சிறைவாசம் அனுபவித்தும் இன்னும் சிறையில் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil