/indian-express-tamil/media/media_files/2025/10/12/indian-student-arrivals-2025-10-12-08-50-58.jpg)
அமெரிக்காவில் இந்திய மாணவர் வருகை 44% சரிவு: கொரோனா தொற்றுக்குப் பிறகு மோசமான வீழ்ச்சி!
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இலையுதிர் செமஸ்டர் (Fall semester) தொடங்குவதற்கு முன்னதாக, கடந்த ஆகஸ்ட்டில் அமெரிக்காவுக்கு வருகை தந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, கோவிட் தொற்றுநோய்க்குப் (2020) பிறகு இல்லாத அளவுக்குக் குறைந்தபட்ச அளவை எட்டி உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 44% அதிகமான சரிவாகும்.
சர்வதேச வர்த்தக நிர்வாகம் (International Trade Administration - ITA) பராமரிக்கும் தரவுகளின்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 41 ஆயிரத்து 540 இந்தியர்கள் மட்டுமே மாணவர் விசாக்களில் (F, M பிரிவுகள்) அமெரிக்காவுக்கு வந்துள்ளனர். இது 2020-ல் பயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோது பதிவான எண்ணிக்கைக்குப் பிறகு மிகக் குறைவான வருகையாகும். முந்தைய ஆண்டுகளில், இந்திய மாணவர்களின் வருகை ஆகஸ்ட் மாதத்தில் உச்சத்தை எட்டியது. 2021-ல் 56,000 ஆக இருந்தது, 2022-ல் 80,486 ஆகவும், 2023-ல் 93,833 ஆகவும் உயர்ந்தது. ஆனால் இந்த ஆகஸ்ட் 2024-ல் 41,540 ஆகக் குறைந்துள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இந்த ஆண்டு, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களிலும் இந்திய மாணவர்களின் வருகை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40% மேல் குறைந்துள்ளது. ஜூலை 2023-ல் 24,298 ஆக இருந்தது 2024-ல் 13,027 ஆகக் குறைந்தது. ஜூன் 2023-ல் 14,418 ஆக இருந்தது 2024-ல் 8,545 ஆகக் குறைந்தது. ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் மொத்த இந்திய மாணவர்களின் வருகை இந்த ஆண்டு 63,112 மட்டுமே; இது தொற்றுநோய்க்குப் பிறகு இதே காலகட்டத்தில் பதிவான ஆகக் குறைந்த எண்ணிக்கையாகும்.
ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா வந்த சீன மாணவர்களின் எண்ணிக்கை (ஹாங்காங் தவிர) 86,647 ஆகும். இது இந்திய மாணவர்களின் எண்ணிக்கை விட 2 மடங்கு அதிகமாகும். சீன மாணவர்களின் வருகையிலும் சரிவு இருந்தாலும் (கடந்த ஆண்டு 98,867), அது இந்தியாவைப் போல கூர்மையாக இல்லை.
இந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவுக்கு வந்த மொத்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 3.13 லட்சம் ஆகும். இது கடந்த ஆண்டு ஆகஸ்டில் இருந்த 3.87 லட்சத்தை விட 19% குறைவாகும். 2020 மற்றும் 2021-ஐ தவிர்த்தால், இது கடந்த பத்தாண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த அளவாகும். 2023–24 கல்வியாண்டில், இந்திய மாணவர்கள் சீன மாணவர்களை விஞ்சி, அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான சர்வதேச மாணவர் பிரிவாக உருவெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சரிவுக்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணங்களாகக் கருதப்படுபவை:
டிரம்ப் நிர்வாகத்தின் கெடுபிடி: சர்வதேச மாணவர்களுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகள். பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களுடன் தொடர்புடைய மாணவர்கள் மற்றும் சட்டம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன.
விசா நேர்காணல் நிறுத்தம்: மே-ஜூன் மாதங்களில் விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக நடவடிக்கையைத் தீவிரமாகச் சரிபார்க்கும் பொருட்டு, மாணவர் விசா நேர்காணல்கள் சில வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டன.
விசா நிராகரிப்பு அதிகரிப்பு: டிரம்ப் நிர்வாகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே விசா நிராகரிப்பு விகிதம் அதிகரித்தது. அக்டோபர் 2023 முதல் செப்டம்பர் 2024 வரை, 41% F-1 மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன, இது ஒரு தசாப்தத்தில் மிக அதிகம்.
நிதி நெருக்கடி: பல பல்கலைக் கழகங்கள் மத்திய அரசின் நிதி குறைப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவும் சர்வதேச மாணவர் வருகையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us