ஆப்கான் பட்டினி போராட்டம் முதல் அமெரிக்காவில் பரவும் ஒமிக்ரான் வரை – உலகின் டாப் 5 நிகழ்வுகள்

உலகளவில் ஓவர்நைட்டில் நடந்த 5 முக்கிய சம்பவங்களை பார்த்து தெரிஞ்சுக்கோங்க…

  1. மோடி-புதின் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இன்று டெல்லியில் சந்தித்து பேசவுள்ளனர். அப்போது, இருநாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதத்தை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

பயங்கரவாதம் தடுப்பது, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவியளிப்பது மற்றும் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் ஆகிய விவகாரத்தில் இரு தரப்பினரும் “மிக நெருக்கமாக” பணியாற்றியதாக இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு உயர்மட்ட அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இருநாட்டு பேச்சுவார்த்தையை வலுப்படுத்தும் நோக்கில், புதிய முயற்சியாக இருதரப்பு வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையிலான 2+2 அமைச்சர்கள் சந்திப்பு, மோடி -புதின் சந்திப்புக்கு முன்பு நடைபெறவுள்ளது. இதுவரை இந்தியா 2+2 அமைச்சர்கள் சந்திப்பை அமெரிக்கா,ஜப்பான், ஆஸ்திரேயிலா நாடுகளுடன் வைத்துள்ளது.

  1. மூன்றில் ஒரு பங்கு அமெரிக்க மாகாணங்களில் ரவியது ஒமிக்ரான்

கொரோனா வைரஸின் புதிய ஒமிக்ரான் மாறுபாடு அமெரிக்க மாகாணங்களில் மூன்றில் ஒரு பங்கில் பரவியுள்ளது.அதே சமயம், டெல்டா கொரோனா பாதிப்பும் அதிகளவில் ஏற்படுவதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவிக்கிறது.

ஒமிக்ரான் அச்சுறுத்தல் குறித்து பேசிய அமெரிக்க தொற்று நோய் அதிகாரியான டாக்டர் அந்தோனி பௌசி, ” இதுவரை அதன் தீவிரத்தன்மை பெரிய அளவில் இருப்பதாகத் தெரியவில்லை. அதே சமயம், விரைவாக முடிவுக்கு வர முடியாது. சில தரவுகள் ஆய்வு தேவை. விரைில் தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு மீதான பயண தடையை அமெரிக்க நீக்கும் என எதிர்ப்பார்க்கிறேன் என்றார்.

  1. ஆப்கானை வாட்டி வதைக்கும் பசிப்போராட்டம்

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி நான்கு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அங்கு மக்கள் பட்டினி போராட்டத்தில் தவித்து வருகின்றனர். இந்த குளிர்காலத்தில் 1 மில்லியன் குழந்தைகளைக் கொல்லப்படுவதற்கான அபாயமும் இருப்பதாக எச்சரிக்கின்றனர்.

ஆப்கானிஸ்தான் பல தசாப்தங்களாக ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பசி நெருக்கடி சமீபத்திய மாதங்களில் கடுமையாக மோசமடைந்துள்ளது. இந்த குளிர்காலத்தில், மொத்த மக்கள்தொகையில் 22.8 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என U.N. உலக உணவுத் திட்டம் மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பகுப்பாய்வு கூறுகிறது. அவர்களில், 8.7 மில்லியன் மக்கள் உணவு நெருக்கடியின் மிக மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

4.செனட் தலைவரும், அதிபர் வேட்பாளருமான பாப் டோல் மரணம்

இரண்டாம் உலகப் போர் வீரர்களின் சின்னமாகவும், கொண்டாடுபவராகவும் மாறிய பாப் டோல் உயிரிழந்தார். அவருக்கு வயது 98. அவர் போரில் ஏற்பட்டுள்ள காயங்களை வென்றேடுத்து, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராகவும், கன்சாஸில் செனட் தலைவராகவும் இருந்தவர்.

பிப்ரவரி 2021 இல் ஸ்டேஜ் 4 நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக டோல் அறிவித்தார். சுமார் 36 ஆண்டு நாடாளுமன்ற வாழ்க்கையில், மிகவும் செல்வாக்கு மிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்களில் ஒருவராக வளம்வந்தார்.

5.மியான்மர் பாதுகாப்பு படை வாகனம் ஏறியதில் ஐவர் பலி

யாங்கூனில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிர்ப்புப் போராட்டத்தில், மியான்மர் பாதுகாப்புப் படையினர் கார் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் செய்தி இணையதளமான மியான்மர் நவ் தெரிவித்துள்ளது.

பலர் காயமடைந்து சாலையில் கிடப்பது சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ, புகைப்படம் மூலம்தெரிய வந்துள்ளது. பிப்ரவரி 1 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு 1,300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட போதிலும், ராணுவத்திற்கு எதிரான போராட்டங்கள் அங்கு தொடரந்த வண்ணம் உள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 5 overnight developments from around the globe

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com