அமெரிக்கா பூஸ்டர் டோஸ் முதல் ட்விட்டர் சிஇஓவாக இந்தியர் வரை – உலகின் டாப் 5 நிகழ்வுகள்

உலகளவில் ஓவர்நைட்டில் நடந்த 5 முக்கிய சம்பவங்களை பார்த்து தெரிஞ்சுக்கோங்க…

1.ஒமிர்கான் கொரோனா… பூஸ்டர் டோஸை செலுத்தும் அமெரிக்கா

உலகம் முழுவதும் புதிய வகை கொரோனா பரவ தொடங்கியுள்ளதால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் எடுத்துகொள்ள வேண்டும் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) கூறியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாட்டின் பரவலைத் தடுக்க தடுப்பூசியை விரிவுப்படுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதையடுத்து பூஸ்டர் டோஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2.இடதுசாரி காஸ்ட்ரோ வெற்றிப் பாதையில் முதல் பெண் அதிபர்

ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சில மணிநேரங்களுக்கு நிறுத்தப்பட்டாலும், ஹோண்டுராஸின் அதிபராக சியோமாரா காஸ்ட்ரோ ஜொலிக்க தயாராகிவருகிறார். சியோமாரா தனது கணவரின் ஆட்சி கவிழ்ந்த பிறகு சுமார் 12 ஆண்டுகள் கழித்து இடதுசாரியின் பலத்தை மீண்டும் கொண்டு வருகிறார்.

மத்திய அமெரிக்க நாட்டின் முதல் பெண் அதிபராக இருக்கும் காஸ்ட்ரோ, ஹோண்டுராஸில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு உட்பட பெரிய மாற்றங்களை உறுதியளித்துள்ளார்.சீனாவுக்கு ஆதரவாக தைவானுக்கான இராஜதந்திர ஆதரவை கைவிடுவதற்கான யோசனையை அவர் முன்வைத்துள்ளார்.

  1. பாகிஸ்தான் காவல் நிலையத்தை எரித்த மர்ம கும்பல்

இஸ்லாமத்தின் புனித நூலான குரானை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மனநலம் குன்றிய நபரை ஒப்படைக்க அதிகாரிகள் மறுத்ததையடுத்து, வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள காவல் நிலையத்தை ஒரு கும்பல் அடித்து நொறுக்கி தீ வைத்துள்ளனர். காவல் நிலையத்திற்கு வெளியே இருந்த வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர்.

இதில் அதிகாரிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து, நிலைமை கட்டுப்படுத்த பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள சார்சடா மாவட்டத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

  1. ட்விட்டர் சிஇஓ-வாக இந்தியர் நியமனம்

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து ஜாக் டோர்சி விலகியதை அடுத்து இந்தியரான பராக் அக்ரவால் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பராக் அக்ரவால் 2011ஆம் ஆண்டு அக்டோபரில் ட்விட்டர் நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலையில் இணைந்தார். அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப தலைவர் ஆக இருந்த ஆடம் மெசிஞ்சர் அப்பதவியில் இருந்து விலகியதை அடுத்து பராக் அக்ரவால் மார்ச் 8, 2018ல் ட்விட்டரின் CTO பொறுப்புக்கு வந்தார்.

  1. இஸ்தான்புல்லில் புயல்; 4 பேர் பலி..பலர் காயம்

திங்களன்று இஸ்தான்புல் மற்றும் துருக்கியின் பிற பகுதிகளை அதி தீவிர புயல் தாக்கியதில், றைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர். 15மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எசென்யுர்ட் மாவட்டத்தில் வீட்டின் கூரை ஒரு பெண் மீதும், குழந்தை மீதும் விழுந்துள்ளது. இதில், அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் அச்சிறுமி உயிர் பிழைத்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 5 overnight developments from around the globe

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express