Advertisment

உலக செய்திகள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய நிகழ்வுகள் என்ன?

உலகளவில் ஓவர்நைட்டில் நடந்த 5 முக்கிய சம்பவங்களை பார்த்து தெரிஞ்சுக்கோங்க…

author-image
WebDesk
New Update
உலக செய்திகள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய நிகழ்வுகள் என்ன?
  1. ஆஸ்ட்ரோவொர்ல்ட் திருவிழாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு
Advertisment

ஆஸ்ட்ரோவொர்ல்ட் திருவிழா கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண் பார்தி ஷஹானி உயிரிழந்துள்ளார்.

டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இவர், கூட்ட நெரிசலில் ஏற்பட்ட படுகாயங்கள் காரணமாக உயிரிழந்தார். அவர், தனது சகோதரி மற்றும் உறவினருடன் கச்சேரி பார்க்கச் சென்றுள்ளார்.

ராப் ஸ்டார் டிராவிஸ் ஸ்காட்டின் ஆஸ்ட்ரோவொர்ல்ட் விழாவில் 14 முதல் 27 வயதுக்குட்பட்ட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்தனர். 9 வயது சிறுவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

  1. மனைவி, 3 குழந்தைகளைக் கொன்ற இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநர்

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் சங்கர் நாகப்பா ஹங்குட், 2019 ஆம் ஆண்டில் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை, பல நாள்கள் வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

publive-image

55 வயதான ஹங்குட், கலிபோர்னியாவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் பல நாட்களாக வைத்து தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளைக் கொன்றதாக ஒப்புக்கொண்டதாக விசாரணையாளர்கள் தெரிவித்தனர். அவர்களுக்கு பணம் வழங்க முடியாததால் கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

  1. ஐக்கிய அரபு அமீரகத்தில் 2023ல் COP28 காலநிலை மாநாடு

2023 ஆம் ஆண்டில் COP 28 சர்வதேச காலநிலை மாநாட்டை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

publive-image

இதுகுறித்து பேசிய ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் முகமது பின் ரஷித் அல்-மக்தூம், " மாநாட்டை வெற்றியடையச் செய்ய எங்களது அனைத்துத் திறனையும் பயன்படுத்துவோம்.உலகளாவிய காலநிலை நடவடிக்கைக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறுதியுடன் இருக்கும்" என்றார்.

  1. இஸ்லாமியர்களைப் பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கும் பாகிஸ்தான்

இசுலாமியத் தலைவர் சாத் ரிஸ்வியை, பயங்கரவாத கண்காணிப்புப் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் நீக்கியது. இதன் மூலம், ஒப்பந்தத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் விடுவிக்கப்படவுள்ளார்.

publive-image

இந்த முடிவானது, Tehrik-e-Labaik Pakistan (TLP) இயக்கத்தைச் சேர்ந்த 2000 பேர் தடுப்பு காவலிலிருந்து விடுவிக்கப்பட்டபிறகு, எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இக்குழுவினர் தேர்தலில் போட்டியிட விதித்திருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலாக, முகமது நபியின் கேலிச்சித்திரங்களைப் பிரெஞ்சு பத்திரிகை வெளியிட்டதற்காக பிரான்சின் தூதரை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை திரும்பப் பெறுவதாக TLP ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

  1. பெலாரஸ் புலம்பெயர்ந்தோர் நெருக்கடி: ஐநாவில் ரஷ்யா, மேற்கத்திய நாடுகள் சலசலப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கு எல்லைகளில் குடியேறுபவர்களின் நெருக்கடி ராணுவ மோதலாக அதிகரிக்கக்கூடும் என்று பெலாரஸ் எல்லையில் உள்ள நாடுகள் எச்சரித்துள்ளன. இதுதொடர்பாக ஐநாவில் எஸ்டோனியா, பிரான்ஸ், அயர்லாந்து, நார்வே, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் 15 உறுப்பினர்களைக் கொண்ட குழு கேள்வி எழுப்பியது.

பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடி கொடுக்கும் நோக்கில், போலந்து மற்றும் பிற அண்டை நாடுகளுக்குள் நுழைய போரினால் பாதிக்கப்பட்ட உலகின் பல்வேறு பகுதிகளை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்களை பெலாரஸ் ஊக்குவிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது. லிதுவேனியா, எஸ்டோனியா மற்றும் லாட்வியா ஆகியவை பெலாரஸ் ஐரோப்பிய பாதுகாப்புக்குக் கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறியுள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment