பிரான்ஸின் கலேஸ் அருகே உள்ள கால்வாயில் புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குளானதில் 27 பேர் உயிரிழந்தனர். கடலில் தத்தளித்தவர்களை, பிரான்ஸ் அதிகாரிகள் மீட்டனர்.
இரு நாடுகளையும் பிரிக்கும் குறுகிய கடற்பரப்பில் இடம்பெயர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட மிக மோசமான விபத்து இதுவாகும். முதலில் 31 பேர் உயிரிழந்ததாக பிரான்ஸ் அதிகாரிகள் கூறிய நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 27 ஆக குறைக்கப்பட்டது.
Advertisment
Advertisements
ஸ்வீடனின் முதல் பெண் பிரதமர் சில மணி நேரங்களில் ராஜினாமா
மக்டேலேனா ஆண்டர்சன் புதன்கிழமையன்று ஸ்வீடனின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . ஆனால் அவரின் கூட்டணி கட்சி அரசிலிருந்து விலகியதால் அவரும் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். பிரதமராகி 12 மணி நேரத்திற்குள், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆனால், ஆண்டர்சன் கூறுகையில் ஒரே அரசின் தலைவராக மீண்டும் பிரதமராவேன் என சபாநாயகரிடம் கூறியதாக தெரிவித்தார். மீண்டும் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் மக்டேலேனா ஆண்டர்சன் வெற்றிப் பெற வாய்ப்புள்ளது. கூட்டணி பட்ஜெட் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, க்ரீன் கட்சி வெளியேறியது.
ஜார்ஜியாவில் கறுப்பினத்தவர் கொலை - மூவர் கைது
ஜார்ஜியாவில் கறுப்பினத்தவர் அஹ்மத் ஆர்பெரியைக், விரட்டி சென்று துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் பிப்ரவரி 2020இல் நடைபெற்றது. இதன் காணொலி ஆன்லைனில் வெளியானது, கறுப்பினத்தவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை தடுக்க கோரி பல தரப்பினரும் போராடத்தில் ஈடுபட்டனர்.
லிபியா தேர்தல்: சைஃப் அல்-இஸ்லாம் கடாபி தகுதி நீக்கம்
லிபியாவின் தேர்தல் ஆணையம், முன்னாள் ஆட்சியாளரின் மகனும், டிசம்பரில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் முக்கிய வேட்பாளருமான சைஃப் அல்-இஸ்லாம் கடாபி போட்டியிடத் தகுதியற்றவர் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 25 வேட்பாளர்களில் கடாபியும் ஒருவர் ஆவர். கடாபி போட்டியிடுவது நீதித்துறை கையில் தான் உள்ளது.
காபூல் விமான நிலையத்தை இயக்க தலிபான்களுடன் ஐக்கிய அரபு அமீரகம் பேச்சுவார்த்தை
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் காபூல் விமான நிலையத்தை இயக்க தலிபான்களுடன் பல தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானின் முக்கிய விமான இணைப்பாக செயல்படும் விமான நிலையத்தை இயக்குவது பற்றி விவாதிக்க, வளைகுடா பிராந்தியத்தை தளமாகக் கொண்ட வெளிநாட்டு தூதர்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர்.