50 people killed in Congo gold mine collapse : ஆப்பிரிக்க நாடான கிழக்கு காங்கோவில் தங்க சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. காங்கோ நாட்டில் உள்ள கமிடுகா என்ற இடத்தில் தங்க சுரங்கத்தில் பணியாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பருவமழை காரணமாக அங்கு விடாமல் மழை பெய்து கொண்டிருந்தது.
இதனால் சுரங்கத்தின் வெளியே மண் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சுரங்கத்தின் அருகே திடீர் வெள்ளமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் சுரங்கத்தின் உள்ளே பணியில் ஈடுபட்டிருந்த 50 நபர்களின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்த பகுதியில் நிறைய சுரங்கங்கள் அமைந்துள்ளன. இங்கு ஒவ்வொரு வருடத்திற்கும் குறைந்தது 12 நபர்கள் வரை பலியாவது வாடிக்கையான ஒன்றாக அமைந்துவிட்டது. சட்டத்திற்கு புறம்பாக மக்கள் தங்கம் தேடும் நடவடிக்கையில் ஈடுபடும் போது இது போன்று நடைபெறுவது உண்டு. கடந்த வருடம் அக்டோபர் மாதம் 16 நபர்கள் கொல்லப்பட்டனர். காப்பர் சுரங்கம் ஒன்றில் கடந்த ஜூன் மாதம் 43 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.