ஃப்ர்ஸ்ட் லவ் பெஸ்ட் லவ்: 60 ஆண்டுகள் கழித்து முதல் காதலனை மணந்த பெண்!

80 வயதாகும் ஓமனும், 69 வயதாகும் ஹோல்ட்டும் பேரன் பேத்தி முன்னிலை திருமணம் செய்துக் கொண்டனர். 

தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி படம்  நிஜத்தில் நிகழ்ந்தது என்றால்  உங்களால் நம்ப முடிகிறதா..  ஆனால் கிளைமாக்ஸில்  மட்டும் சின்ன  மாற்றம்

முதல் காதல்:

காதல் ..  முன்பெல்லாம்  இந்த வார்த்தையை சொன்னாலே வீட்டில் அடி கிடைக்கும். ஆனால் இப்போது  குடும்ப சண்டைப் போல் காதல் விவகாரம் வீடுகளில் சர்வ சாதரணமாக மாறி விட்டது. பெற்றோர்களும் இந்த தலைமுறைக்கு எற்றவாறு  காதலை பக்குவமாக அனுக ஆரம்பிவிட்டார்கள்.

காதலிப்பவர்கள்  பலரும்  தங்களது முதல் காதல் வெற்றிக்கரமாக   திருமணத்தில் முடிந்து விட்டால் அதை பெருமையாக வெளியில் சொல்லி கொள்வார்கள்.  முதல் காதல் தோற்று போனாவர்களும் ”எனக்கு ஃபர்ஸ்ட் லவ் ப்ரேக் அப் ” என ஸ்டேட்டஸ் வைத்தே சொல்லி விடுவார்கள்.

ஏனென்றால் காதலில் இந்த முதல் காதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.  ஃபர்ஸ்ட் லவ் பெஸ்ட் லவ் என்ற வசனம் சினிமாக்களில் அதிகம் பேசப்படும். அப்படித்தான்  லண்டனில் ஒரு ஜோடி 60 ஆண்டுகள் கழித்து முதல் காதலில் ஜெயித்து உள்ளார்கள்.

லண்டனை சேர்ந்த ரான் ஓவன் என்ற முதியவரும்,  ரூத் ஹோல்ட் என்ற மூதாட்டியும் சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டர்.  இவர்களின் திருமணத்தில் நடைப்பெற்ற ருசிகரம் என்னவென்றால் இவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தவர்கள் இவர்களின் பேரன் பேத்திகள்.

ஓவனும், ஹோலட்டும் 1950 ஆம் ஆண்டு ஒரே அலுவலகத்தில் பணியாற்றியுள்ளனர். அந்த சமயத்தில் இவருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆனால்  சூழ்நிலை காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர், அதன் பின்பு ரூத் ஹோல்ட் பாடகியாக மாறி, வேறு ஒருவரை திருமணம் செய்துக் கொண்டு சவுதி அரேபியாவில் குடிபெயர்ந்து விட்டார்.

முதல் காதல்

60 ஆண்டுகளுக்கு முன்பு

இவருக்கு தற்போது 4 பேரக்குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகள் கழித்து தனது கணவரை விவாகரத்து செய்த இவர், தனது பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.  திருமணம் செய்துக் கொண்ட பின்பு, ஹோல்ட்க்கு தனது முதல் காதலன் ஞாபகம் பசுமையன நினைவாக இருந்துள்ளஹு.

இந்நிலையில் தான், சமீபத்தில் நடந்த ஹோல்ட்டின் இசை நிகழ்ச்சி ஒன்றில் அவரின் முதல் காதலர் ஓவன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

தனது முன்னாள் காதலனை பார்த்ததும், தனது வாழ்நாள் சந்தோஷத்தை அடைந்துள்ளார். இருவரும் ஒருவருக்கொருவர் அடையாளம்கண்டு தங்களை பற்றி ஞாபகபடுத்தி கொண்டனர்.  60 ஆண்டுகளுக்கு முன்பு தவறவிட்ட வாய்ப்பை  இம்முறை  மிஸ் பண்ணாமல் 80 வயதாகும் ஓமனும், 69 வயதாகும் ஹோல்ட்டும் பேரன் பேத்தி முன்னிலை திருமணம் செய்துக் கொண்டனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close