இணையத்தில் நிறை மாத கர்ப்பிணி ஒருவர், பெண்களின் கர்ப்பகால ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில், ஆடும் கம்பம் நடனம்(Poll dancing) பலரையும் மலைக்க வைத்துள்ளது.
பெண்களுக்கு கர்ப்பக்காலம் ஒரு வித்தியாசமான அனுபவம்.அவர்கள் எதிர்கொள்ள போவது என்ன என்பதை யாராலும் கூற முடியாது.உடலில் ஏற்படும் மாற்றங்களை மருத்துவர்கள் கூட தோராயமாகத் தான் சொல்வார்கள். ஆனால், உடலில் ஏற்படு சிறு சிறு மாற்றங்களை கூட பெண்கள் உணர்ந்து ரசிப்பார்கள்.
அந்த வகையில், அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரத்தில் 9 மாத கர்ப்பிணியான அலிசான் ஸ்பஸ், தனது கர்ப்பக்காலத்தில் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வரவேற்கும் விதமாகவும், பிரசவத்தின் போது பெண்கள் எதிர்க் கொள்ள இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்கும் வகையில் தினமும் கம்பம் நடனத்தை உடற்பயிற்சி போல் செய்து வருகிறார்.
இதுக்குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ நான் இப்போது 9 மாத கர்ப்பிணி. என்னுடைய உடல் தோற்றம் முற்றிலுமாக மாறியுள்ளது. அது எனக்கு நன்றாகவே தெரியும். இதை நான் முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதே நேரத்தில் எல்லா பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு தங்களுடைய அழகான உடல் தோற்றம் போய்விடுமோ என்று எண்ணி பயப்படுகிறார்கள்.
,
அவர்களுக்கு நான் தரும் ஒரே ஆலோசனை. உடற்பயிற்சி. கர்பக்காலத்திலும் என்னால் இந்த நடனத்தை ஆட முடிகிறது. அதே போல் பெண்களும் வீட்டில் இருந்தப்படியே தங்களால் முடிந்த உடற்பயிற்சிகளை மேற் கொள்ள வேண்டும். என் வீடியோவை பார்க்கும் பலரும் என்னை வெகுவாக பாராட்டி வருகின்றன” என்று கூறியுள்ளார்.
,
View this post on InstagramA post shared by Allison Sipes (@alliegatoruf) on
இவரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அலிசானை தொடர்புக் கொள்ளும் பலரும் அவரை கர்ப்பிணிக்கு இதுப் போன்ற உடலுக்கு நன்மை தரும் உடற் பயிற்சிகளை கற்றும் தரும் படி கேட்டு வருகின்றனராம்.
,
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.