குதிரை என்று பேஸ்புக்கில் கமென்ட் : 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

சம்பவம் நிகழ்ந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு, அவருக்கு அபராதத்துடன் கூடிய தண்டனை

British Woman : முன்னாள் கணவரின் மனைவியை, பேஸ்புக்கில் குதிரை என்று கமென்ட் செய்த பிரிட்டிஷ் பெண்ணிற்கு துபாய் கோர்ட் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியதோடு மட்டுமல்லாது, 65 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டனை சேர்ந்தவர் லாலே ஷாரவேஷ் (55). இவர் தனது கணவருடன் துபாயில் 8 மாதங்கள் மட்டுமே வசித்திருந்தார். இவரது கணவர் கடந்த 2016ம் ஆண்டில் மரணமடைந்ததை தொடர்ந்து துபாயில் நடந்த அவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில், தனது 14 வயது மகளுடன் கலந்துகொண்டார்.

இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியின் போது முன்னாள் கணவரின் மனைவிக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து, லாலே, பேஸ்புக்கில் முன்னாள் கணவரின் மனைவியை “குதிரை” என்று பதிவிட்டார்.

இதுதொடர்பாக, துபாய் மக்கள் நல ஆர்வலர்களிடம் புகார் தெரிவித்த முன்னாள் கணவரின் மனைவி புகார் அளித்ததை தொடர்ந்து, விசாரணை நடத்தியது. சம்பவம் நிகழ்ந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு, அவருக்கு அபராதத்துடன் கூடிய தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close