ரஷ்யாவில் நாய் ஒன்றின் மீது அதன் உரிமையாளர் குளிர்ந்த தண்ணீரை ஊற்றி, உறைந்த வெப்பநிலையில் அதனை வெளியே நிற்கவைத்து கொடுமையாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
Advertisment
ரஷ்யாவில் யாகுட்சுக் நகரம், உலகிலேயே மிகவும் குளிர்ச்சியான நகரமாகும். அங்கு நாய் ஒன்றின் மீது அதன் உரிமையாளர் குளிர்ந்த தண்ணீரை ஊற்றி, மைனஸ் 32 டிகிரி செல்சியஸ் உறைநிலை நிலவும் சூழ்நிலையில் அதனை வெளியே நிற்க வைத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இச்சம்பவத்தால் அந்நாய் மீது பனியால் போர்த்தியதுபோன்று இருந்தது. இதனால், அந்நாய் குளிரால் நடுங்கி துடிதுடித்து இறந்தது.
விலங்கு நல ஆர்வலர்கள் அதனை காப்பாற்ற முயன்றும் பலனளிக்கவில்லை.
“அந்த நாயின் கண்கள் இறக்கும் தருவாயில் இருந்ததை மறக்கவே முடியாது. ஏற்கனவே இறந்துகொண்டிருக்கும் மனிதன் வாழ விரும்புவதுபோன்று அதன் கண்கள் இருந்தன”, என அதனை நேரில்கண்ட விலங்கு நல ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.
அந்த நாயின் உரிமையாளர் இதுபோன்று செல்ல பிராணிகளை துன்புறுத்தும் சம்பவங்களில் இதற்கு முன்னதாகவும் ஈடுபட்டதாக தெரிகிறது. அவருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என ஆர்வலர்கள் கையெழுத்து பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.