பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக 30 நிமிட பாடல் வீடியோவை உருவாக்கி உள்ளார். இது கமலா ஹாரிஸின் பிரச்சாரத்திற்கு பெரும் ஊக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடக்க உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இதில் கமலா ஹாரிஸ் இந்திய மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில், தேர்தலில் ஹாரிஸை ஆதரித்த தெற்கு ஆசியாவின் முதல் பெரிய சர்வதேச கலைஞர் ரஹ்மான் ஆவார்.
ஆசிய, அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி அமைப்பு (ஏ.ஏ.பி.ஐ) இந்த தேர்தலில் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த ஏ.ஏ.பி.ஐ கமலா ஹாரிஸுக்கு பிரச்சார பாடல் உருவாக்க ரஹ்மானுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, ரஹ்மான் 30 நிமிட பாடல் உருவாக்கியுள்ளார். அதில், அவரின் சர்வதேச புகழ் பெற்ற பாடல், கமலா ஹாரிஸ் தேர்தல் சந்திப்பு மற்றும் ஏ.ஏ.பி.ஐ நற்பணிகள் பற்றி இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோ ஏ.ஏ.பி.ஐ விக்டரி ஃபண்ட் யூடியூப் பக்கத்தில் அக்.13-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“