Advertisment

அரசை வீழ்த்திய மக்கள் போராட்டம்..எப்படி சாத்தியமானது இலங்கையில் ?

இலங்கையில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தால், அதிபரும், பிரதமரும் தலைமறைவாகி இருக்கின்றனர். இனி இலங்கை அரசியலில் என்ன நடக்கும் என்ற கேள்வி எழும் அதேவேளையில் , மாபெரும் மக்கள் எழுச்சி எப்படி நடைபெற்றது என்ற கேள்வி எழுந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அரசை வீழ்த்திய மக்கள் போராட்டம்..எப்படி சாத்தியமானது இலங்கையில் ?

இலங்கையில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தால், அதிபரும், பிரதமரும் தலைமறைவாகி இருக்கின்றனர். இனி இலங்கை அரசியலில் என்ன  நடக்கும் என்ற கேள்வி எழும் அதேவேளையில் , மாபெரும் மக்கள் எழுச்சி எப்படி நடைபெற்றது என்ற கேள்வி எழுந்துள்ளது.  

Advertisment

லட்சகணக்கான மக்கள், கடந்த சனிக்கிழமை ஜூலை 9ம் தேதி, அதிபர் கோத்தபயா வசிக்கும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர். இலங்கை ராணுவமே என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறியது. இப்படிபட்ட  திரளான மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு உள்ளே நுழையும் காட்சிகள் வெளியானது. இப்படிபட்ட மாபெரும் மக்கள் எழுச்சி எப்படி சாத்தியமானது என்ற கேள்வி நம்மிடம் எழுவது இயல்பே.

இந்நிலையில் பல்வேறு சமூக ஆர்வளர்களின் முயற்சியால் மட்டுமே இது சாதியமாகி இருக்கிறது.  இந்த போராட்டங்கள் நடைபெற காரணாமக இருந்த குழுவில், கிருஸ்துவ பாதிரியார் இருக்கிறார், டிஜிட்டல் வல்லுநர் மற்றும் நாடக ஆசிரியார் ஆகியோர் இருகின்றனர். ஜூன் மாதத்தில்தான், போராட்டத்திற்கான முதல் பணிகள் நடைபெற்றுள்ளது. இலங்கையின் தலைநகரமான கொலும்பில், சமூக ஆர்வளர்கள் முகாமிட்டு, போராட்டங்களை எப்படி நடத்துவது என்று முடிவு செய்தனர். இதுதொடர்பாக டிஜிட்டல் வல்லுநர் சாமீரா கூறுகையில்,’ இந்த போராட்டம் கைகூட 50% திட்டமிடுதலும், ஒருங்கிணத்தலும் காரணமாக இருந்தாலும், 30% மக்களின் ஒத்துழைப்பும், 20% அதிர்ஷ்டமும் காரணம்’ என்று அவர் கூறினார். சிறு குழுக்களால் நடத்தப்பட்ட  கூட்டங்களும், அதன் தாக்கங்களும் இப்போராட்டத்திற்கு அடித்தளமிட்டன.

தொடர்ந்து ஏற்பட்ட மின்சார நிறுத்தம் மற்றும் விலை உயர்வால், மார்ச் மாதங்களில், ராஜபக்சே குடும்பத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. சுமார் 20 வருடங்களாக ஆட்சியில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினரை பதிவி விலகுமாறு மக்கள் போராட்டம் நடத்தினர்.

2005 முதல் 2015 வரை தொடர்ந்து அதிபராக இருந்த மகிந்த ராகபக்சே தொடர் போரட்டத்தால் மே 9ம் தேதி பதவி விலகினார். ராஜபக்சே சகோதரர்களில் ஒருவரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சே, கொழும்பு விமான நிலையத்தில் இருந்து தப்பி ஓட முயன்றபோது போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இப்படி பல விஷயங்கள் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் ஒன்றுபட்ட போராட்டத்தை உருவாக்க, தொழில் சங்கங்களுடனும், மாணவர்கள் சங்கத்தின்னுடனும் போராட்டக்குழு பேச்சு வார்த்தை நடத்தியது. சமூகவலைதளங்களில் “ Gota Go Home” என்ற பிரச்சாரங்கள் தீவிரப்படுத்தபட்டன.

இலங்கையில் 80 லட்சம் பேர் முகப்புத்தகத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் பேஸ்புக் மூலம், எல்லா மக்களையும் சென்றடைய முடிந்தது என்று போராட்டக்குழு தெரிவித்துள்ளது. இலங்கையின் மிக முக்கிய மாணவர்கள் இயக்கமான  ஐயுஎஸ்எப் ( Inter University Students’ Federation) தொடர்பு கொண்டு அவர்களையும் போராட்டத்தின் அங்கமாக மாற்ற முயற்சி செய்யப்பட்டது. காவல்துறையினர் சில இடங்களில், ஊரடங்கு உத்தரவை கடைபிடித்ததால், போராட்டத்திற்கு மக்கள் வருவார்களா ? என்ற கேள்வி தங்களிடம் இருந்ததாக போராட்டக் குழு கூறுகின்றனர். ஆனால் நாங்கள் எதிர்பார்த்தைவிட அதிக மக்கள் திரண்டனர் என்று அவர்கள் கூறுகின்றனர். 5 ஆயிரம் பேர் முதல் 10 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என்று நினைத்தோம். ஆனால் காவல்துறையினர் கொடுத்த தகவலின்படி 2 லட்சம் வரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது என்று போராட்டக்குழு தெரிவித்துள்ளது.  

”குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என்று அனைவரும் கலந்துகொண்டனர். மக்களின் மனசாட்சியே இப்போராட்டம்” என்று போராட்டக்குழு தெரிவித்துள்ளது.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment