Afghanistan crisis : அன்று மதியம் காபூலில் அமைந்திருக்கும் குல்லாய் ஃபத்துல்லா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் அங்குள்ள ஆசியர்கள் அனைவரையும் அழைத்து வீடுகளுக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.
தாலிபான்கள் நகரை அடைந்துவிட்டனர் என்ற செய்தியை அவர் கேட்டவுடன், ஆசிரியர்கள் குறிப்பாக பெண்கள் பள்ளிகளில் இருந்து தாக்குதலுக்கு மத்தியில் மாட்டிக் கொள்ள கூடாது என்று அவர் எண்ணியதால் அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.
62 வயதான தலைமை ஆசிரியர், ஆஃப்கானில் ஏற்பட்ட பல போர்களையும், ஏற்ற இறக்கங்களையும் தன்னுடைய கண்களால் கண்டவர். தாலிபான்களின் வருகை அவரை பீதிக்கு ஆளாக்கியது. ஏன் என்றால் அவரின் பள்ளியில் பணியாற்றும் 20 ஆசிரியர்களில் 16 நபர்கள் பெண்கள். அவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 30 வயதினர்.
அவர்களின் வாழ்க்கையை எண்ணால் பணயம் வைக்க இயலாது என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய அவர். அவர்கள் என் குழந்தைகளைப் போன்றவர்கள், என் பேரக்குழந்தைகளைப் போன்ற மாணவர்களுக்குக் கற்பிக்கிறார்கள் என்று அவர் கூறினார்.
ஷெர்-இ-நாவு நகரத்தில், வெஸ்டர்ன் யூனியன் பண பரிமாற்றம் நடக்கும் அலுவலகத்தின் முன்பு அதிகாலையிலேயே குவிந்த கூட்டம் வர இருக்கும் ஆபத்துகளை அடிகோடிட்டு காட்டியது. தலிபான்கள் நகரத்தின் வெளியே இருப்பது தெரிந்தவுடன் ஆண்களும் பெண்களும் காலை 8 மணியில் இருந்து ப்பணாம் பணம் எடுக்க வரிசையில் வந்து குவிந்தனர்.
ஜலாலாபாத்தின் வீழ்ச்சி பற்றிய செய்திகள் அவர்களின் அச்சத்தையும் பதட்டத்தையும் அதிகரித்தது. வீட்டிற்கு விரைந்து செல்வதற்காக ஒரு பெண் தனது அழகு நிலையத்தின் ஷட்டர்களை கீழே இறக்கிவிட்டு சென்றார். பலரும் காபூலின் நேரம் வந்துவிட்டது என்று உணர்ந்திருந்தனர்.
காபூலை கைப்பற்றிய தாலிபான்கள்… நாட்டை விட்டு ஓடிய அதிபர்… தப்பித்துக் கொண்ட அமெரிக்கா
நகரத்தில் உள்ள பெண்களுக்கு, 1990 களில் தலிபான் வருடங்கள் மிகவும் இருண்ட ஒன்றை தொடர்ந்து நினைவுபடுத்துகின்றன. அந்த காலங்களில் அவர்களுக்கு பெண்களுக்கு அடிப்படை உரிமைகளை கூட மறுக்கும் சட்டங்கள் அமலில் இருந்தன. கல்வி கற்றலில் துவங்கி அவர்களின் நடமாட்டம் மறுக்கப்பட்டு, அணியும் ஆடைகள் மீது தீவிரமான கட்டுபாடுகளை விதிப்பது போன்ற பல சட்டங்கள் இதில் அடங்கும்.
அன்றைய இருண்ட காலம் பற்றி நாங்கள் கேட்டது மட்டுமே உண்டு. அதனை நினைக்கும் போதே பயமாக உள்ளது. வீட்டில் அமர்ந்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்காமல் இருந்த அந்த காலத்திற்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை என்று தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் விளம்பரங்களில் இடம்பெற்ற தொலைக்காட்சி நடிகையான முப்பத்தொரு வயதான ஷபானா நூரி, தாலிபான் ஆட்சியின் சுமையை பெண்கள் எப்போதும் சுமக்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாக, சுதந்திர தாலிபான் ஆட்சி அற்ற, சுதந்திர ஆஃப்கானில் வளர்ந்தோம். அது எப்படி இருந்தது என்று கூட எனக்கு நினைவில் இல்லை. நாங்கள் அந்த காலகட்டத்திற்கு மீண்டும் திரும்பமாட்டோம் என்று நம்புகிறோம் என்று கூறினார்.
அவர்களின் வருகை காட்டுத்தீ போல பரவ, நகரம் பீதிக்குள்ளானது. எல்லா இடங்களிலும் போக்குவரத்து நெரிசல்கள் காணப்பட்டது. மக்க்கள் வங்கிகளில் இருந்து பணம் எடுத்துக் கொண்டனர். வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அதிக அளவில் வாங்க துவங்கினார்கள். மொபைல் நெட்வொர்க்குகளும் தடங்கல்களை எதிர்கொண்டன. பிற்பகலுக்குள், வீதிகள் மொத்தமாக காலியாகின. தாலிபான்கள் காபூலை இறுதியாக கைப்பற்றினார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil