ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: 2053 பேர் பலி, 9240 பேர் காயம்!

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரமான நிலநடுக்கத்தில் 2053 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒன்பது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரமான நிலநடுக்கத்தில் 2053 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒன்பது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

author-image
WebDesk
New Update
earthquakes kill 2053

சனிக்கிழமையன்று (அக்.7) பல நிலநடுக்கங்கள் ஹெராட் நகரின் வடமேற்கில் 35 கிமீ (20 மைல்) தொடர்ந்து ஏற்பட்டது. இது. 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

தலிபான்கள் ஆளுகைக்கு உட்பட்ட ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை ( அக்டோபர் 7) மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது.
 இந்த நிலநடுக்கத்தில் அப்போதே 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது உயிர் இழப்பு 2 ஆயிரத்தை எட்டி உள்ளது.

Advertisment

 ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றுள்ளனர். ஆப்கானிஸ்தானின் வடமேற்கு மாகாணமான ஹெராட் நகரின் வடமேற்கில் 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ரிட்டர் அளவுகோலில் இந்த நில நடுக்கம் 6.3 என பதிவாகியுள்ளது.

Afghanistan earthquakes kill 2,053, Taliban says, as death toll spikes

நிலநடுக்க காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஆப்கானிஸ்தான் சுகாதாரத்துறை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மாநில மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

 இதுகுறித்து அவர்கள், " தற்போது வரை 2053 உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 9240 பேர் காயமுற்றுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன" என்றனர். இந்த நிலையில், இந்த நிலநடுக்கங்கள் ஹெராட்டில் பீதியை ஏற்படுத்தியதாக குடியிருப்பாளர் நசீமா சனிக்கிழமை தெரிவித்தார்.

Advertisment
Advertisements

இதுகுறித்து, “மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர், நாங்கள் அனைவரும் தெருக்களில் இருக்கிறோம்," என்று அவர் ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது. மேலும் நகரில் தொடர்ந்து நடுக்கம் உணரப்படுகிறது என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Afghanistan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: