பாகிஸ்தான் சமூகவலைத்தளங்களில் தர்பூசணி விற்கும் இளைஞர் ஒருவர் வைரலாகி, ஒரே நாள் இரவில் ஓபாமா ஆன பிரபலங்கள் லிஸ்டில் இடம் பிடித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் இத்வார் சந்தைப் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக பணிப்புரிந்து வந்தவர் தான் அர்ஷத் கான். அவ்வளவு எளிதாக இந்த இளைஞரை நம்மால் மறந்து விட முடியாது. நீல நிறக் கண்களுடன் மிளிரும் அர்ஷ்த் கானை ஜியா அலி என்பவரது புகைப்பட புராஜெக்டுக்காக ஃபோட்டோ எடுத்திருந்தார்.
அன்று இரவே அந்த ஃபோட்டோ இணையத்தில் வைரலானது. பெண்கள், இளைஞர்கள் என பலரும் டீ மாஸ்டர் இவ்வளவு அழகா? என்ற ஆச்சரியத்துடன் பலரும் அர்ஷ்த் கானின் புகைப்படத்தை லைக் செய்தனர். அதனைத் தொடர்ந்து யோகம் அடித்து யோகம் போல் Fitin என்ற நிறுவனத்தின் மாடலாக மாறினார் அர்ஷத் கான்.
இதனைத் தொடர்ந்து தற்போது தர்பூசணி விற்கும் இளைஞர் ஒருவரும் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறார. பாகிஸ்தானில் இருக்கும் தெரு ஒன்றில் தர்பூசணியை பழத்தை விற்கும் இளைஞர் போல் இவரின் புகைப்படம் இணையத்தில் வெளியானது. அதே நீல நிற கண்கள், ஒரு முறை பார்த்த உடனே மீண்டும் பார்க்க தோன்றும் முகம் என பார்ப்பதற்கே மிகவும் அழகாக தோற்றம் அளிக்கிறார்.
இந்த புகைப்படத்தை பலரும் தர்யூசணி வாலா என்ற பெயரில் அதிகளவில் ஷேர் செய்து வந்தனர். இந்நிலையில், அவரின் மற்றொரு புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் “இவன் என் நண்பன். தர்பூசணி விற்கும் இளைஞல் இல்லை. கூடிய விரைவில் மருத்துவராக போகிறான்” என்று அவரின் நண்பர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது என்னடா ட்ஸ்வீட் என்பது போல் பலரும் அதிர்ச்சியில் அந்த புகைப்படத்தை வழக்கம் போல் எடிட்டிங் செய்தா? அல்லது மார்ஃபிங்கா? என்று சோதிக்க ஆரம்பித்து விட்டனர்.