கரும்பலகையில் கணினி படம் வரைந்த ஆசிரியருக்கு இந்திய நிறுவனம் கொடுத்த கிஃப்ட்!

மாணவர்களுக்கு மிக எளிமையாக விளக்குவதற்கு அதனை கரும்பலகையில் வரைந்து விளக்கிய புகைப்படத்தை தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

ஆப்பிரிக்காவில்  கணினி இல்லாததால் மாணவர்களுக்கு கரும்பலகையில் எம்எஸ் வெர்ட்டை வரைந்து காட்டிய ஆசிரியருக்கு இந்திய நிறுவனம் கணினிகளை பரிசாக வழங்கி சிறப்பித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானா நாட்டில் ஓவுரா குவாடோ ஹோட்டிஷ் (Owura Kwadwo Hottish) என்ற ஆசிரியர், மைக்ரோசாஃப்ட் வார்ட் குறித்து, தன் மாணவர்களுக்கு மிக எளிமையாக விளக்குவதற்கு அதனை கரும்பலகையில் வரைந்து விளக்கிய புகைப்படத்தை தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

மாணவர்களின் நலனுக்காக இத்தகைய புதிய யுக்தியை கையாண்ட இந்த ஆசிரியருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்தனர். இந்த புகைப்படம்  சமூவலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், கானாவில் செயல்பட்டு வரும் ஒரு இந்திய ஐ.டி. பயிற்சி நிறுவனம் அந்த பள்ளிக்கு கம்ப்யூட்டர்களை வழங்கி உதவியுள்ளது. அந்த பள்ளிக்கு 5 கம்ப்யூட்டர்கள், 1 லேப் டாப் வழங்கி அவர்களை மகிழ்வித்துள்ளது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு கணினியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில்,  ஆசிரியரின் கரும்பலகையில் பாடம் நடத்தியது குறித்தும் பிரமித்து பேசியுள்ளனர்.

Betenase M/A JHS in Sekyedumasi in the Ashanti region has received support from NIIT Ghana/NewEdge Infotech Ghana. This…

Posted by Niit Ghana on 15 मार्च 2018

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close