Advertisment

அம்மாவைப் போன்றே மகளும் தைரியசாலி தான் - கமலாவை பற்றி பெருமைப்படும் தாய் மாமா

மகள்கள் தங்களின் அடையாளத்தை நினைத்து பெருமை அடைய வேண்டும் என்று சியாமளா அடிக்கடி கூறுவது உண்டு.

author-image
WebDesk
New Update
இடையில் பேசிய துணை அதிபருக்கு பதிலடி கொடுத்த கமலா!

 Somya Lakhani , Arun Janardhanan

Advertisment

Kamala Harris’ nomination : ”கமலா நான் உன்னை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். சியாமளா உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுவார்”.  புதன்கிழமை காலை, 80 வயது மிக்க கோபாலன் பாலச்சந்திரன், டெல்லியில் இருக்கும் கமலாவின் தாய்மாமா, கமலா ஹாரிஸிற்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். 2020ம் ஆண்டு அதிபர் தேர்தலில் துணை அதிபர் போட்டியாளராக ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ்  போட்டியிடுவார் என்று  ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

கமலாவின் தாய் மாமாவா கோபாலன் டிஃபென்ஸ் ஸ்டடீஸ் அண்ட் அனலசிஸ் கல்வி நிறுவனத்தில் பணியாற்றினார். இனம் மற்றும் பாலினம் தொடர்பான விவகாரங்களில் அமெரிக்கா பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த போதே, கமலா ஹாரிஸ் தான் துணை அதிபராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்த்தேன் என்று கூறுகிறார் கோபாலன். கமலா அமெரிக்க அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் நோக்கி முன்னேறுவார் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான் என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார் அவர்.

மேலும் படிக்க : தமிழகமே கொண்டாடும் கமலா ஹாரிஸ்.. ஒட்டு மொத்த நாட்டுக்கும் பெருமை சேர்த்தார்!

பாலச்சந்திரன் அமெரிக்கா சென்ற போது அவர்கள் இருவரும் கடைசியாக டிசம்பர் 2019-ல் பேசியுள்ளனர். வாஷிங்டனில் இருக்கும் தன்னுடைய மகள் மூலமாக கமலாவுடன் அடிக்கடி பேசுவதாக அவர் கூறுகிறார். சென்னையில் இருக்கும் கமலா ஹாரிஸின் சித்தி சரளா இது குறித்து கூறிய போது, “நான் இன்னும் கமலாவுடன் பேசவில்லை. அவர் தற்போது மிகவும் பிஸியாக இருப்பார் என்று நினைக்கின்றேன். அவருடன் பேசி 2 நாட்களுக்கு மேல் ஆகிறது என்கிறார் 76 வயதான கமலாவின் சித்தி.

டெல்லி மற்றும் மும்பையில் சியாமாளவுடன் வளர்ந்தது குறித்து நினைவு கூறினார் அவருடைய அண்ணன் பாலச்சந்திரன். தன்னுடைய 19வது வயதில் அமெரிக்கா செல்ல முடிவெடுத்தார் சியாமளா. பெர்க்லியில் இருக்கும் யுனிவெர்சிட்டி ஆஃப் கலிஃபோர்னியாவில் படிக்கும் போது குடிமக்களின் உரிமைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் பங்கேற்றார். பிறகு ஜமைக்காவை சேர்ந்த பொருளாதார மாணவரான டொனால்ட் ஹாரிஸை 1963ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 2009ம் ஆண்டு சியாமளா மரணம் அடைந்தார்.

மேலும் படிக்க : அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸின் மன்னார்குடி பின்னணி

”சியாமளாவின் பிரதிபலிப்பை அவருடைய மகளிடமும் காணலாம். லேடி இர்வின் கல்லூரியில் ஹோம் சையன்ஸ் படித்தார் சியாமளா. நானும் என் அப்பாவும் சியாமளாவை கேலி செய்வோம். ஆனால் பெர்க்லியில் அவராகவே அப்ளை செய்து, ஸ்காலர்ஷிப் மூலம் அமெரிக்கா சென்றார். என்னால் முடியும். நான் இதை செய்வேன் என்று அடிக்கடி கூறுவார். அப்படித்தான் கமலாவும் இருக்கிறார்.  சியாமளாவின் அப்பா பி.வி. கோபாலன் மூத்த அரசு அதிகாரியாக பணியாற்றினார். சியாமளாவின் முதலாம் ஆண்டு படிப்பிற்கு மட்டுமே செலவு செய்வேன். அதற்கு அடுத்த வருடம் அவரே படித்துக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டார். எங்கள் எப்பா எங்களிடம் அடிக்கடி சொல்வதுண்டு “ என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள். எங்கு படிக்க விரும்புகிறீர்களோ படியுங்கள். உங்களின் முதலாம் ஆண்டு படிப்பு செலவை நான் ஏற்றுக் கொள்வேன்” என்று.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க 

எங்களுடைய பெற்றோர்கள் நாங்கள் எப்படி நம்முடைய கொள்கையுடன் இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்துள்ளனர். ஒருவரின் மொழி, உணவு, தோற்றம் ஆகியவற்றை காரணமாக யாரிடமும் வேற்றுமை காட்டக் கூடாது என்று கூறியுள்ளனர். அதனை தான் சியாமளா தன்னுடைய மகள்கள் கமலா மற்றும் மாயாவிற்கு கற்றுக் கொடுத்துள்ளார்.

தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் “சியாமளா வயதில், பெண்கள் வெகு தூரத்தில் இருக்கும் கல்லூரிகளில் படிக்க வரும் போது சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை குறித்து எழுதியிருக்கிறார். சியாமளாவை அவர்களுடைய பெற்றோர்கள் அனுப்பும் போது ஏற்பட்டிருக்கும் உணர்வுகளை நினைத்து பார்க்கும் போது மிகவும் கடினமாக இருக்கிறது” என்று கூறீயுள்ளார்.

சியாமளா அமெரிக்காவில் குடிமக்களின் உரிமைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்றது குறித்து பாலச்சந்திரன் பேசும் போது, அப்போது மிகவும் சில இந்தியர்கள் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்றனர். எங்களுடைய பெற்றோர்கள் இது குறித்து மிகவும் கவலை அடைந்த போது சியாமளா “ நான் நன்றாக படிக்கின்றேன். நலமுடன் இருக்கிறேன். ஆனால் நான் இந்த இயக்கத்தில் பங்கேற்க வேண்டும்” என்று கூறியிருந்தார். நல்ல வேலையாக அந்த நேரத்தில், போராட்டம் செய்த மாணவர்களை அவர்களின் சொந்த நாட்டிற்கு அமெரிக்கா திருப்பி அனுப்பவில்லை.

1963ம் ஆண்டு சியாமளா டொனால்ட் ஹாரிஸை மணந்து கொண்டார். சியாமளாவின் வீட்டில் எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக யாரும் திருமணத்திற்கு செல்லவில்லை. திருமணத்திற்கு முன்பு மருமகனை பார்க்க வேண்டும் என்று சியாமளாவின் அப்பா நினைத்தது மட்டும் நிறைவேறவில்லை.

சியாமளாவும் அவருடைய கணவரும் கோபாலனை ஜாம்பியாவில் சந்தித்தனர். அவர்கள் இருவரும் சென்னைக்கும் வருகை புரிந்துள்ளனர். கமலாவிற்கு 5 வயது ஆகும் போது அவர்களின் பெற்றோர்கள் பிரிந்துவிட்டனர்.

இது குறித்து கமலா எழுதும் போது, எங்கள் வாழ்வில் அப்பா ஒரு முக்கியமான பங்கு வகித்தார். வார இறுதிகளில் நாங்கள் அவரை சந்திக்க செல்வோம். ஆனால் எங்களை வளர்த்து ஆளாக்கியது எல்லாம் எங்களின் அம்மா தான். அவர் தான் இன்றைய சமூகத்தில் பொறுப்புமிக்க பெண்களாக எங்களை வளர்த்து ஆளாக்கியுள்ளார் என்று கூறியிருக்கிறார்.

தனியாக இருந்து இரண்டு மகள்களை மிகவும் தைரியமாக வளர்த்துள்ளார். இருவரையும் நன்றாக படிக்க வைத்து, வழக்கறிஞர்களாக மாற்றியுள்ளார். நிறைய சமூக இயக்கங்களில் பங்கேற்க வைத்துள்ளார். சிறந்த கர்னாடிக் பாடகியான சியாமளா தன்னுடைய மகள்களை கோவிலுக்கு அழைத்து செல்வார். ஆப்பிரிக்க - அமெரிக்கர்கள் வசிக்கும் பகுதியில் தான் அவர்கள் வளர்ந்தனர். தங்கள் மகள்கள் தங்களின் அடையாளத்தை நினைத்து பெருமை அடைய வேண்டும் என்று சியாமளா அடிக்கடி கூறுவது உண்டு. மனிதர்கள் மனிதர்கள் தான் என்று கூறி இருவரையும் வளர்த்துள்ளார்.

சரளா இது குறித்து கூறும் போது “கமலாவிற்கு தமிழ் அவ்வளவாக தெரியாது. ஆனால் இந்தியா குறித்தும், இந்து நம்பிக்கைகள் குறித்தும், உணவுகள் மற்றும் கலாச்சாரம் குறித்தும் நன்கு அறிவார். தன்னுடைய இந்திய பின்புலம் குறித்து அதிகமாக பேசாத கமலா தன்னுடைய சுயசரிதையில் குடும்பம் பற்றி எழுதியுள்ளார். இந்தியாவிற்கு சில சமயங்களில் வருகை புரிவது, கடிதங்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் இங்கும் அங்கும் அனுப்பப்படுவது தான் குடும்பம் என்ற உணர்வாக இங்கு இருப்பது இவை தான்.

என் அம்மா, தாத்தா, பாட்டி, அத்தை, மாமா ஆகியோர் எங்களின் தெற்காசிய பாரம்பரிய இணைப்பை நினைத்து பெருமிதம் கொண்டார்கள். எங்கள் இந்தியப் பெயர்கள் எங்கள் பாரம்பரியத்திற்கு வழி வகுத்துள்ளது. மேலும் இந்திய கலாச்சாரத்தைப் பற்றிய வலுவான விழிப்புணர்வு மற்றும் பாராட்டுதலுடன் நாங்கள் வளர்க்கப்பட்டோம். என் தாயின் பாசம் அல்லது விரக்தியின் வார்த்தைகள் அனைத்தும் அவளுடைய தாய்மொழியில் வெளிவந்த அந்த உணர்ச்சிகளின் தூய்மையே என்னை என் அம்மாவுடனான இணைப்பை உணர்கின்றேன். அவர் வரலாற்றை உணர்ந்தவர், போராட்டத்தை உணர்ந்தவர், ஏற்றத்தாழ்வுகளை உணர்ந்தவர். அவர் ஆத்மாவில் நீதி உணர்வோடு பிறந்தவர் ” என்று எழுதியுள்ளார் கமலா ஹாரிஸ்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Kamala Harris
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment