New Update
00:00
/ 00:00
மலாவி துணை அதிபர் சவுலோஸ் கிளாஸ் சிலிமா மற்றும் 9 பேர் சென்ற ராணுவ விமானம் வானில் மாயமானதாக அந்நாட்டு அதிபர் அலுவலகம் திங்களன்று தெரிவித்துள்ளது.
"விமானம் தரைக்கட்டுப்பாட்டு ரேடாரில் இருந்து விலகியதில் இருந்து விமானத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. விமான அதிகாரிகள் மேற்கொண்டு வந்த அனைத்து முயற்சிகளும் இதுவரை தோல்வியடைந்துள்ளன" என்று மலாவி அதிபர் அலுவலகம் மற்றும் அமைச்சரவை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
51 வயதான சிலிமா மற்றும் அவருடன் 9 பேர், தலைநகர் லிலாங்வேயில் இருந்து நேற்று (திங்கட்கிழமை) காலை 09:17 மணிக்கு (0717 GMT) பாதுகாப்புப் படையின் விமானத்தில் புறப்பட்டனர். புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் மாயமாகியுள்ளது. இதையடுத்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/world/aircraft-carrying-malawi-vice-president-missing-presidency-says-9384290/
லிலாங்வேயில் இருந்து புறப்பட்ட விமானம் Mzuzu சர்வதேச விமான நிலையத்தில் காலை 10:02 மணிக்கு தரையிறங்கவிருந்தது. ஆனால் அதற்குள் விமானம் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.