ஆற்றில் பாய்ந்த விமானம் : அமெரிக்காவில் பயங்கரம்!

ஆற்றில் மிதந்ததால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

USA,
USA,

அமெரிக்காவில் ஆற்றுக்குள் பாய்ந்த விமானத்தால் அங்கு பரபரப்பு நிலவிவருகிறது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

கியூபா நாட்டின் குவாண்டனாமோவிலிருந்து 143 பயணிகளுடன் அமெரிக்காவின் புளோரிடாவிற்கு போயிங் 787 விமானம் வந்தது. விமானம் தரையிறங்கும் போது நிலைதடுமாறி ரன்வேயை தாண்டிச்சென்று அருகில் உள்ள ஜோன்ஸ் ஆற்றில் பாய்ந்தது.விமானம் மூழ்காமல், ஆற்றில் மிதந்ததால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் நலமுடன் உள்ளனர். 20 பேருக்கு மட்டுமே சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஜாக்சன் வில்லி நகர மேயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aircraft fired on the river in america

Next Story
ஆஸி., நெடுஞ்சாலையில் முக்கண் பாம்பு : வைரலாகும் போட்டோ3 eyed python found at australia
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express