ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் சிறையில் மரணம்: திடுக்கிடும் தகவல்கள்

ரஷ்ய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் மரணம் அடைந்து விட்டார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அலெக்ஸி நவல்னி ஜனவரி 2021 முதல் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.

ரஷ்ய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் மரணம் அடைந்து விட்டார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அலெக்ஸி நவல்னி ஜனவரி 2021 முதல் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.

author-image
WebDesk
New Update
Alexei Navalny jailed Russian opposition leader dies

வாக்கிங் சென்று திரும்பிய நிலையில், நவல்னி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி யமலோ-நெனெட்ஸ் பிராந்தியத்தின் சிறைச்சாலையில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, யமலோ-நேனெட்ஸ் தன்னாட்சி மாவட்டத்தின் பெடரல் பெனிடென்ஷியரி சர்வீஸ் அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “வாக்கிங் சென்று திரும்பிய நிலையில், நவல்னி "உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்" என்றும், "கிட்டத்தட்ட உடனடியாக சுயநினைவை இழந்தார்" என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisment

மேலும், “மருத்துவ ஊழியர்கள் அழைக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்களால் நவல்னியை காப்பாற்ற முடியவில்லை எனவும் அலெக்ஸி நவல்னி மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்துவருகிறது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நவல்னியின் மரணத்திற்கான காரணம் குறித்து தன்னிடம் எந்த தகவலும் இல்லை என்று கிரெம்ளின் கூறியுள்ளது, மேலும் அவரது மரணம் தொடர்பான அனைத்து சோதனைகளையும் சிறைத்துறை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், ரஷ்யாவின் விசாரணைக் குழு மரணம் தொடர்பாக நடைமுறை விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
ரஷ்ய செய்தித்தாள் ஆசிரியரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான டிமிட்ரி முராடோவ் ராய்ட்டர்ஸிடம் சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மரணம் "கொலை" என்று விமர்சித்துள்ளார்.

மேலும் சிறைச்சாலை நிலைமைகள் அவரது மரணத்திற்கு வழிவகுத்தன என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார். ரஷ்யாவின் மிக முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும், புடினை விமர்சிக்கும் ஒருவருமான அலெக்ஸி நவல்னிக்கு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீவிரவாதக் குற்றச்சாட்டின் பேரில் ரஷ்ய நீதிமன்றத்தால் மேலும் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Advertisment
Advertisements

நவல்னி 2021 ஜனவரியில் இருந்து ரஷ்யாவில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு, அரசின் ஊழல்களுக்கு எதிராக பரப்புரை செய்தார். புதின் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.
இந்த நிலையில், அவர் மூன்று சிறைத்தண்டனைகளைப் பெற்றார். மேலும் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அப்போது அவர் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்தார்.

நவல்னி தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சிறைக் காலனி, மாஸ்கோவிற்கு வடகிழக்கே சுமார் 1,900 கிமீ (1,200 மைல்) தொலைவில் உள்ள யமலோ-நெனெட்ஸ் பகுதியில் கடுமையான சட்டங்களுக்கு பெயர் பெற்றதாகும்.

ஆங்கிலத்தில் வாசிக்க : Alexei Navalny, jailed Russian opposition leader, dies in prison

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Russia

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: