அமெரிக்காவிற்கு பெரும் சவாலாக இருக்கும் இந்த கிம் ஜாங் உன் யார்?

அமெரிக்கா நாடிற்கு உலகம் முழுவதும் உள்ள ஒரு சில நாடுகளே ஆதரவு அளித்து வரும் நிலையில், அந்நாட்டிற்கு பெரும் சவாலாக இருப்பது ரஷ்யா மற்றும் கொரியா நாடுகள் தான். குறிப்பாக ரஷிய அதிபர் புதின் ஒருவகையில் சவாலாக இருந்து வரும் நிலையில், கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்காவுக்கு பல சவால்களை அளித்து கதி கலங்க வைக்கிறார் என்றே கூற வேண்டும்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக கொரியாவை ஆண்டு வரும் கிம் குடும்பத்தின் வாரிசு தான் கிம் ஜாங் உன். இவர் கடந்த 7 வருடங்களாக கொரியாவை ஆண்டு வருகிறார். வட கொரியாவில் தற்போது நிலவி வரும் நிலையை கருத்தில் கொண்டு கண்காணித்தால், கிம் ஜாங் உன்-ற்கு இருக்கும் அதிகாரம் என்னவென்று எல்லோராலும் புரிந்துக்கொள்ள முடியும்.  இப்போது இருக்கும் அவரின் ஆட்சிக்காலத்தில், அவர் நினைத்தால் யாருடைய அனுமதியும் இல்லாமல் அணு ஆயுதப் போரை தொடங்கவும் முடியும், விருப்பம் ஏற்பட்டால் இரு நாடுகளுக்கு இடையே உறவை உண்டாக்கவோ அல்லது அறுத்துக்கொள்ளவோ முடியும்.

 

கிம் ஜாங் உன்னின் குழந்தைப் பருவம்:

கிம் ஜாங் உன்னின் சரியான பிறந்த தேதி பற்றி எந்த ஒரு தகவலும் இன்று வரை யாருக்கும் தெரியவில்லை. 1982ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி கிம் பிறந்ததாக அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது. ஆனால் இந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் வகையில் அந்நாட்டின் உளவுத்துறை கிம் 1983ம் ஆண்டில் பிறந்துள்ளதாக தெரிவிக்கிறது. ஏனெனில் வட கொரிய நாட்டின் தலைவர்கள் தங்களின் வாரிசுகளை வெளிநாட்டில் ரகசியமாக வைத்து வளர்ப்பது வழக்கமான ஒரு செயலாகும். அரசு குடும்பத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தனித்தனியாக வளர்க்கப்படுவது வழக்கம். எனவே பிறந்த சில ஆண்டுகளில் சுவிட்ஸர்லாந்திற்கு அனுப்பப்பட்டார் கிம் ஜாங் உன். பெர்னில் உள்ள வட கொரிய தூதரகத்தின் ஒரு அதிகாரியின் மகன் என்றே கிம் வளர்க்கப்பட்டார். சிறு வயது முதலே கூடைப்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர் இவர்.

கிம் ஜாங் உன் பற்றிய தகவலகள் அனைத்தும் 2010ம் ஆண்டு முதலே தான் வெளியாக தொடங்கியது. கிம் ஜாங் இல்லிற்கு பிறகு வட கொரியாவை ஆளப்போகும் அதிபர் என்று கிம் ஜாங் உன் அறிமுகப்படுத்தப்பட்டார். 2011ம் ஆண்டி கிம் ஜாங் இல் மரணமடைந்தார். அதே ஆண்டே அனைத்துப் பொருப்புகளையும் தனது வசமாக்கிக்கொண்டார். இவரின் ஆட்சி அமைந்த நாள் முதல் இப்போது வரை பல்வேறு அணு ஆயுதச் சோதனைகளாஇ நிகழ்த்தினார். மேலும் புதிய வகை ஏவுகணைகள் சோதனையில் வெற்றிப்பெற்று அண்டை நாடுகளை கதி கலங்க வைத்தார். குறிப்பாக அவரது காலத்து முதலே திறன் வாய்ந்த ராக்கெட்டுகள் விண்வெளிக்கு செல்லும் அளவிற்கு ஆயத்தப்படுத்தப்பட்டது.

 

மிரள வைக்கும் கிம் ஜாங் உன்னின் பின்புலம்:

தனக்கு எதிராக இருப்பது யாராக இருந்தாலும் அவர்களை அழிப்பதையே நோக்கமாக கொண்டிருந்தார். சொந்தமாக, உறவுமுறைகளாகவோ இருந்தாலும் கூட விட்டு வைக்க மாட்டார் கிம். அதற்கு தகுந்த உதாரணம், தனது மாமா ஜாங் சுங் தயீக்-ற்கு அவர் மரண தண்டனை விதித்தது தான். 2007ம் ஆண்டு ஒரு தொழிலதிபர் வெளிநாடுகளுடன் தொடர்ந்து தொலைப்பேசியில் பேசி வந்ததற்காக, விளையாட்டு அரங்கத்தில் வைத்து அவரை லட்சம் பேர் சுற்றியிருக்க சுட்டுக் கொன்றார் கிம். இவை அனைத்தையும் விட மனதை உருக்கும் சம்பவமாக அமைந்தது கிம் ஜாங் நம்மின் கொடூரக் கொலை. கொல்லப்பட்ட கிம் ஜாங் நம், முதல் மனைவியின் மகன், அதாவது உன்னின் சகோதரர். பல்வேறு குற்றங்களை காண்பித்து சிறையில் அடைக்கப்பட்ட நம், அங்கிருந்து தப்பிக்க முயன்றதால் அவரை எந்தவித விசாரணையின்றியும் சுட்டுக் கொன்றார் கிம் ஜாங் உன். கிம் ஜாங் இல் மரணத்திற்கு பிறகு நம் பதவியேற்பார் என்று நினைத்த நிலையில், திடீரென பதவியேற்றார் உன்.

kim jong num

கடந்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்தின் காத்திருந்தார் கிம் ஜாங் நம். இவர் மர்மமான முறையில் திடீரென மரணம் அடைந்தார். அதற்கு காரணம், விமான நிலையத்தில் அமர்ந்திருந்த அவரது முகத்தில் 2 பெண்கள் தடை செய்யப்பட்ட ‘வி எக்ஸ்’ என்ற கொடுமையான ரசாயன வி‌ஷப்பவுடரை வீசினர். இந்த ரசாயனம் உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட ஒன்று. இந்த ரசாயனம் பூசப்பட்ட சில நிமிடத்திலேயே சருமம் மூலம் உடலுக்கு ஊடுருவி, ஆளையே கொன்றுவிடும். இத்தகைய தடை செய்யப்பட்ட ரசாயனம் அதிகாரம் இல்லாத சாதாரண பெண்களுக்கு கிடைத்திருக்காது. எனவே இவர்கள் கிம் அனுப்பிய ஆட்களாகவே இருக்க முடியும் என்று உளவுத்துறை கூறி வருகிறது.

கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரின் மீதும் கொலைக் குற்றம் சாட்டி குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்த நிலையில் இரு பெண்கள் மீதும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 

கிம் ஜாங் உன்னின் புதிய அவதாரம்: 

இப்போது கிம் ஜாங் உன்னின் அரசியல் வாழ்க்கையில், அமெரிக்கா உடனான உறவு புதிய வரலாற்றையே படைத்துள்ளது. உண்மையில் கிம் ஜாங்  நல்லவரா? கெட்டவரா?  என்ற கேள்விக்கு பதில் அவருக்கு மட்டுமே தெரியும்.

×Close
×Close