சீனாவில் 18 வயது இளைஞர் ஒருவர், பெண்கள் கல்லூரியில் தனக்கு அட்மிஷன் வேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்திடம் சண்டையிட்டதும், அதற்கு அவர் அளித்த காரணமும் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
சீனாவின் பெய்ஜிங் நகரத்தில் புகழ்பெற்ற பெண்கள் படிக்கும் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் தற்போது இந்த ஆண்டிற்கான அட்மிஷன் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்காக 18 வயது இளைஞர் ஒருவர் ஆன்லைனின் விண்ணப்பித்துள்ளார்.
இவரின் விண்ணப்ப படிவத்தை பார்த்த கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது. பின்பு, தவறுதலாக இந்த விண்ணப்படிவம் வந்து சேர்ந்து இருக்கலாம் என்று எண்ணி, அந்த இளைஞருக்கு அது பெண்கள் படிக்கும் கல்லூரி என்றும், உங்களின் விண்ணப்பம் நிராகரிப்படுவதாக கடிதம் ஒன்றை அவரின் வீட்டு முகவரிக்கு அனுப்பியுள்ளது.
இந்த கடிதத்தைக் கண்ட, அந்த இளைஞரின் பெற்றோர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அந்த இளைஞர், அது பெண்கள் கல்லூரி என்று தெரிந்து தான் விண்ணப்பித்ததாகவும், தான் கட்டாயமாக அந்த கல்லூரியில் தான் சேர இருப்பதாக கூறி அவர்களுடன் சண்ணையிட்டுள்ளார்.
பின்பு, கல்லூரியிக்கு நேரில் சென்ற அந்த இளைஞர், கல்லூரி நிர்வாகத்திடம் தன்னை இந்த கல்லூரியில் படிக்க அனுமதி வழங்குமாறும் கெஞ்சியுள்ளார். அவரிடம், கல்லூரி எதற்காக பெண்கள் படிக்கும் கல்லூரியின் நீ சேர்ந்து படிக்க விரும்புகிறாய்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அப்போது,அந்த இளைஞர் கூறிய பதில் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. ”என் உயிருக்கு உயிரான காதலி இந்த கல்லூரியில் தான் படிக்கிறாள். அவளைப் பார்க்காமல் என்னால் ஒருநாள் கூட இருக்க முடியாது. அதனால் தான் பெண்கள் கல்லூரியாக இருந்தாலும் பரவாயில்லை என்று இந்த கல்லூரியில் சேர விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்த பதிலைக் கேட்டு திகைத்து நின்ற கல்லூரி நிர்வாகம் வேறு வழியின்றி, அந்த இளைஞருக்கு கல்லூரியில் படிக்க இடம் அளித்துள்ளது.