தாலிபான்கள் உட்பட யாரையும் நம்பவில்லை : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடி

Tamil News Update : நான் உஙகளை நேசிக்கிறேன், ஆனால் நான் நம்பும் மக்கள் அதிகம் இல்லை, என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

Afghanistan Issue Update : ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம், தாலிபான்களை நீங்கள் நம்புகிறீர்களா என்று கேட்டபோது, தான் யாரையும் நம்பவில்லை என்றும் “நீங்கள் உட்பட யாரையும் நான் நம்பவில்லை, நான் உஙகளை நேசிக்கிறேன், ஆனால் நான் நம்பும் மக்கள் அதிகம் இல்லை,” என்று பதிலளித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக அரசுப்படைக்கும் தாலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்று வந்த உள்நாட்டுப்போர் தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் முழு அதிகரத்தையும் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகிறனர்.

இந்நிலையில், தலிபான்களின் எதிர்கால நடவடிக்கை குறித்து வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “தாலிபான்கள் ஒரு அடிப்படை முடிவை எடுக்க வேண்டும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக எந்த ஒரு குழுவும் செய்யாத ஒன்றை ஆப்கானிஸ்தான் மக்களை ஒன்றிணைத்து வழங்க தலிபான் முயற்சி செய்தால், பொருளாதார உதவி, வர்த்தகம் மற்றும் முழு ஊதியத்தின் அடிப்படையில் கூடுதல் உதவி எல்லாம் தேவைப்படும்.

“அவர்கள் மற்ற நாடுகளால் அங்கீகரிக்கப்படுகிறார்களா இல்லையா என்பதை தீர்மானிக்க சட்டப்பூர்வத்தை நாடுகிறார்கள். இதனால் தங்களது ராஜதந்திர இருப்பை யாரும் முழுமையாக நகர்த்தவில்லை என்று மற்ற நாடுகளுக்கும் எங்களுக்கும் கூறியுள்ளனர் என்று கூறிய பைடன், தாலிபான்கள் சொல்வதைக் கடைபிடிக்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும் என்று கூறினார். “

இதுவரை, தாலிபான்கள் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற அனுமதிக்கும் வகையில் அவர்கள் சொன்னதை பெரிய அளவில் பின்பற்றினர். அவர்கள் சொல்வது உண்மையாக இருக்குமா இல்லையா என்பதை நாங்கள் கண்கானித்து வருகிறோம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க வீராகளை திரும்பப் பெறுவதற்கான தனது முடிவில் மாற்றம் இல்லை என்றும் பைடன் கூறியுள்ளார்.

மேலும் குறிப்பிட்ட நாள் முடிவில் நாங்கள் இப்போது ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறவில்லை என்றால் எப்போது திரும்புவோம், இன்னும் 10 ஆண்டுகள்? இன்னும் 5 ஆண்டுகள்? ஆகுமா என்று கேட்டபோது, நான் உங்கள் மகன் அல்லது உங்கள் மகளை ஆப்கானிஸ்தானில் சண்டைக்கு அனுப்பப் போவதில்லை. இது (ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க வீரர்களை திரும்பப் பெறுதல்) தீர்க்கரீதியான மற்றும் பகுத்தறிவு முடிவு என்று வரலாறு பதிவு செய்யப்போகிறது என்று பைடன் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: America president joe biden say about taliban and afghanistan issue

Next Story
ஆப்கன் அதிபருக்கு தஞ்சம் கொடுத்த அமீரகம்: மனிதாபிமான உதவி என அறிவிப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com