Advertisment

வகுப்புகள் முழுவதும் ஆன்லைனில் நடந்தால் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற வேண்டும் - அமெரிக்கா

அமெரிக்க குடிவரவு அதிகாரிகளால் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதலின்படி, கல்லூரிகளில் வகுப்புகள் முழுமையாக ஆன்லைனில் நடத்தப்பட்டால் சர்வதேச மாணவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் அல்லது அவர்கள் வேறு கல்லூரிக்கு மாற்ற கட்டாயப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வகுப்புகள் முழுவதும் ஆன்லைனில் நடந்தால் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற வேண்டும் - அமெரிக்கா

அமெரிக்க குடிவரவு அதிகாரிகளால் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதலின்படி, கல்லூரிகளில் வகுப்புகள் முழுமையாக ஆன்லைனில் நடத்தப்பட்டால் சர்வதேச மாணவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் அல்லது அவர்கள் வேறு கல்லூரிக்கு மாற்ற கட்டாயப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

Advertisment

அமெரிக்காவின் கல்வியாண்டு இலையுதிர்க் கால பருவத்தில் தொடங்குகிறது. அதாவது அந்நாட்டில் செப்டம்பர், அக்டோபர், நம்பவர், டிசம்பர் ஆகிய மாதங்களுக்கான பருவத்தை இலையுதிர் கால பருவம் Fall Term என்று அழைக்கின்றன. அமெரிக்காவில் கல்வியாண்டு Fall Term-இல் தான் தொடங்குகிறது.

அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலக்கத்துறையால் வெளியிட்டப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, அண்மையில் இளைஞர்களிடையே கோவிட்-19 பரவுவதைப் பற்றி அதிகரித்துவரும் கவலைகளுக்கு மத்தியிலும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க கூடுதல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உட்பட சில கல்வி நிறுவனங்கள் அனைத்து கற்பித்தல்களும் தொலைதூரத்தில் இருந்து வழங்கப்படும் என்று அறிவித்தது. அதே நாளில் கல்லூரிகளுக்கும் வழிகாட்டுதல்களைப் பெற்றுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முடிந்தவரை விரைவில் நேரில் கற்பிப்பதற்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். வழிகாட்டுதல்கள் வெளியான உடனேயே, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று டிரம்ப் ட்விட்டரில் மீண்டும் கூறினார். மேலும், ஜனநாயகக் கட்சியினர் அவர்கள் சுகாதார காரணங்களுக்காக மூடி வைக்கவில்லை, மாறாக, பள்ளிகளை அரசியல் காரணங்களுக்காக மூடி வைக்க விரும்புகிறார்கள்” என்று கூறினார்.

“இது நவம்பரில் தங்களுக்கு உதவும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அது தவறு என மக்கள் புரிந்துகொண்டார்கள்” என்று டிரம்ப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கப்பட்ட விதிகளின் கீழ், சர்வதேச மாணவர்கள் தங்கள் வகுப்புகளில் சிலவற்றையாவது நேரில் கற்றுக்கொள்ள வேண்டும். பள்ளிகளில் அல்லது முற்றிலும் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படும் பாடதிட்டங்களில் மாணவர்களுக்கு புதிய விசாக்கள் வழங்கப்படாது. இந்த கல்வியாண்டு தொடக்கத்தில் Fall Term) நேரடி மற்றும் ஆன்லைன் படிப்புகளை கலவையாக வழங்கும் கல்லூரிகளில் சர்வதேச மாணவர்கள் தங்கள் வகுப்புகள் அனைத்தையும் ஆன்லைனில் கற்பதற்குத் தடை விதிக்கப்படும்.

கொரோனா வைரஸ் தங்கள் பள்ளிகளை ஆன்லைனில் வகுப்புகளை நடத்த கட்டாயப்படுத்திய பின்னர், கடந்த வசந்த காலத்தில் அமெரிக்காவில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்களுக்கு இது ஒரு அவசரமான சங்கடத்தை உருவாக்குகிறது. ஆன்லைனில் இருக்கும் பள்ளிகளில் படிப்பவர்கள் புதிய வழிகாட்டுதலின்படி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது நேரடி வகுப்புகளுக்காக வேறு பள்ளிக்கு மாற்றுவது போன்ற பிற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று புதிய வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன.

பல்கலைக்கழக தலைவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க கல்வி கவுன்சில், இந்த வழிகாட்டுதல்கள் திகிலூட்டும் என்றும், பள்ளிகள் பாதுகாப்பாக மீண்டும் திறக்க வழிகளைத் தேடிவரும் நிலையில் இது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார்கள்.

இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் (Fall Term)  மாணவர்கள் தங்கள் பள்ளிகளை ஆன்லைனில் வகுப்புகள் நடத்த கட்டாயப்படுத்தினாலும்கூட மாணவர்கள் விதிகளிலிருந்து விலக்கு பெற மாட்டார்கள் என்று ஒரு நிபந்தனை உள்ளது. ஒரு மாணவர் அந்த சூழ்நிலைக்குச் சென்றால் அவர் தங்கள் நாட்டிலிருந்து பயணக் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டால் என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கவுன்சிலின் மூத்த துணைத் தலைவர் டெர்ரி ஹார்ட்ல் கூறினார்.

“இது மிகப்பெரிய குழப்பத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தும்” என்று ஹார்ட்ல் கூறினார். “தொற்றுநோய் சூழ்நிலைகள் அதற்கு உத்தரவாதம் அளிக்கிறதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், நிறுவனங்கள் மீண்டும் திறக்க ஊக்கத்தொகையை ICE தெளிவாக உருவாக்குகிறது.”

சர்வதேச கல்விக் குழு NAFSA விதிகளை விமர்சித்ததுடன் பள்ளிகளுக்கு தங்கள் வளாகங்களுக்கான சரியான முடிவுகளை எடுக்க அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றது. மேலும், இந்த வழிகாட்டுதல் சர்வதேச மாணவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும், இது அவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கும் ஒட்டுமொத்த உயர் கல்வி சமூகத்தினருக்கும் ஆபத்தையும் ஏற்படுத்துகிறது” என்று கூறியது.

செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடையும் 12 மாத காலப் பருவத்தில் கிட்டத்தட்ட 4 லட்சம் வெளிநாட்டினர் மாணவர் விசாக்களைப் பெற்றனர். இது நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் இருந்ததை விட 40%க்கு மேல் அதிகமாகும். விசா செயலாக்க தாமதத்தை பள்ளி நிர்வாகங்கள் ஓரளவு குற்றம் சாட்டுகின்றன.

அமெரிக்கா முழுவதும் உள்ள கல்லூரிகள் ஏற்கனவே இந்த கல்வியாண்டின் இலையுதிர்க் காலப் பருவத்தில் சர்வதேச மாணவர் சேர்க்கையில் பெரிய அளவில் எண்ணிக்கை குறைவு இருக்கும் எதிர்பார்க்கின்றன. ஆனால், அனைத்து சர்வதேச மாணவர்களையும் இழப்பது சிலருக்கு பெரிய அழிவை ஏற்படுத்தும். பலர் சர்வதேச மாணவர்களிடமிருந்து கல்வி வருவாயை நம்பியுள்ளனர். சர்வதேச மாணவர்கள் பொதுவாக அதிக கல்வி கட்டணங்களை செலுத்துகிறார்கள். கடந்த ஆண்டு, அமெரிக்க பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டிலிருந்து கிட்டத்தட்ட 1.1 மில்லியன் மாணவர்களை ஈர்த்தன.

அதிபர் டொனால்ட் டிரம்பின் விமர்சகர்கள் புதிய வழிகாட்டுதல்களைத் விமர்சித்து வருகின்றனர். சென். பெர்னி சாண்டர்ஸ், வெர்மான்ட் இண்டிபெண்டண்ட் “இந்த வெள்ளை மாளிகையின் கொடுமைக்கு எல்லையே இல்லை” என்றார். “வெளிநாட்டு மாணவர்களுக்கு அச்சுறுத்தலில் தேர்வுகள் உள்ளன: உயிரைப் பணயம் வைத்து நேரடி வகுப்பிற்குச் செல்வது அல்லது நாடு கடத்தப்படுவது” அவர்கள் இதில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்று சாண்டர்ஸ் ஒரு ட்வீட்டில் கூறினார். “நாங்கள் டிரம்பின் மதவெறிக்கு எதிராக நிற்க வேண்டும். எங்கள் மாணவர்கள் அனைவரையும் நாங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.” என்று கூறினார்.

இந்த இலையுதிர்க் காலப் பருவத்துக்கு குறைந்தபட்சம் சில வகுப்புகளை நேரில் நடத்த திட்டமிட்டுள்ளதாக டஜன் கணக்கான கல்லூரிகள் கூறியுள்ளன. ஆனால், சிலர் இது மிகவும் ஆபத்தானது என்று கூறுகிறார்கள். தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம் கடந்த வாரம் மாணவர்களை வளாகத்திற்கு அழைத்து வருவதற்கான திட்டத்தை மாற்றியமைத்தது. வகுப்புகள் முதன்மையாக அல்லது பிரத்தியேகமாக ஆன்லைனில் நடத்தப்படும் என்று கூறியது. ஹார்வர்ட் திங்கள்கிழமை முதலாம் ஆண்டு மாணவர்களை வளாகத்திற்கு அழைக்கும் என்று கூறியது. ஆனால், வகுப்புகள் ஆன்லைனில் இருக்கும் என்று தெரிவித்தது.

தொற்றுநோயின் ஆரம்பத்தில் சர்வதேச மாணவர்களுக்கான சில தேவைகளை குடிவரவு அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். ஆனால், கல்லூரிகள் இந்த இலையுதிர்க் காலப் பருவத்தில் என்ன நடக்கும் என்பது பற்றிய வழிகாட்டுதலுக்காக காத்திருந்தன. ஐ.சி.இ திங்கள்கிழமை மாற்றங்களை பள்ளிகளுக்கு அறிவித்தது மற்றும் ஒரு முறையான விதி வரப்போகிறது என்றது.

இந்த அறிவிப்பு சட்டப்பூர்வ குடியேற்றத்திற்கு எதிராக டிரம்ப் நிர்வாகத்தின் சமீபத்திய தொற்றுநோய் தொடர்பான அடி ஆகும். கடந்த மாதம், அதிகாரிகள் அமெரிக்காவிற்கு வெளியே பலருக்கு புதிய பச்சை அட்டைகளுக்கான தடையை நீட்டித்தனர். மேலும், உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பருவகால தொழிலாளிகள் உள்ளிட்ட தற்காலிக வேலை செய்பவர்களுக்கான அனுமதிகளில் பலரை சேர்க்க முடக்கம் விரிவாக்கப்பட்டது. நிர்வாகம் நீண்டகாலமாக சட்டப்பூர்வ குடியேற்றத்திற்கு ஆழ்ந்த வெட்டுகளைக் கோரியது. ஆனால், அந்த இலக்கு கொரோனா வைரஸுக்கு முன்பாக மழுப்பலாக இருந்தது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment