அமெரிக்கா துப்பாக்கி சூடு; தன்னைத்தானே சுட்டு சந்தேக நபர் தற்கொலை… உலகச் செய்திகள்
பாகிஸ்தானில் மதம் மாற மறுத்ததால், இந்து பெண் பலாத்காரம்; அமெரிக்கா துப்பாக்கி சூடு; தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சந்தேக நபர்… இன்றைய உலகச் செய்திகள்
அமெரிக்கா துப்பாக்கி சூடு; தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சந்தேக நபர்
இன்று உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்.
Advertisment
அமெரிக்கா துப்பாக்கி சூடு; தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சந்தேக நபர்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சீன சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, நடன கிளப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் ராபர்ட் லூனா, ஞாயிற்றுக்கிழமை அந்த நபர் இரண்டாவது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்த இடத்தில் இருந்து தப்பிச் செல்ல பயன்படுத்திய வேனை போலீஸ் அதிகாரிகள் முடக்கியதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.
சந்தேக நபரை 72 வயதான Huu Can Tran என அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்ற சந்தேக நபர்கள் யாரும் தலைமறைவாகவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் மதம் மாற மறுத்ததால், இந்து பெண் பலாத்காரம்
பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் இருந்து கடத்தப்பட்ட திருமணமான இந்துப் பெண், கடத்தல்காரர்களால் இஸ்லாமிய மதத்திற்கு மாறுமாறு மிரட்டப்பட்டதாகவும், மதம் மாற மறுத்ததால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார், இது சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களில் சமீபத்தியது.
பாகிஸ்தானில் மதம் மாற மறுத்ததால், இந்து பெண் பலாத்காரம்
உமர்கோட் மாவட்டத்தில் உள்ள சமரோ நகரில் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், சந்தேக நபர்கள் மீது போலீசார் இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை என்றும் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவில் அந்தப் பெண் கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை வரை, மிர்புர்காஸில் உள்ள காவல்துறையினர் அந்தப் பெண்ணால் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யத் தவறிவிட்டனர் என்று ஒரு உள்ளூர் இந்து தலைவர் கூறினார்.
பெல்ஜியத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்
உளவு பார்த்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டில் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பெல்ஜிய உதவி ஊழியர் ஒலிவீர் வாண்டேகாஸ்டீஸ் (Olivier Vandecasteele) ஈரானில் தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் பிரஸ்ஸல்ஸ் தெருக்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெல்ஜியத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்
இந்தக் குற்றச்சாட்டுகள் போலியானவை என்று பெல்ஜியம் அரசு தெரிவித்துள்ளது.
"அவரது வாழ்க்கை ஆபத்தில் உள்ளது, அவரது சுதந்திரத்திற்கு பங்களிக்கவும்," "#Free Olivier Vandecasteele," என்று வான்டேகாஸ்டீலின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களை உள்ளடக்கிய போராட்டக்காரர்கள் வைத்திருந்த பதாகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வாண்டேகாஸ்டீல் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், பெல்ஜியத்தின் நீதி அமைச்சர், "புனையப்பட்ட தொடர் குற்றங்களுக்காக" வாண்டேகாஸ்டீல் சிறையில் அடைக்கப்பட்டார் என்றும், 2021 இல் ஈரானிய தூதர் மீது பெல்ஜிய நீதிமன்றங்கள் சுமத்தப்பட்ட 20 ஆண்டு சிறைத்தண்டனைக்கு பழிவாங்கும் வகையில் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் கூறினார்.
பாகிஸ்தானில் மின்வெட்டு
பாகிஸ்தானின் தேசிய மின்கட்டமைப்பில் ஏற்பட்ட பெரிய முறிவு காரணமாக திங்கள்கிழமை அதிகாலை நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டதாக மத்திய எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் மின்வெட்டு
“ஆரம்பத் தகவலின்படி, இன்று காலை 7:34 மணியளவில் (உள்ளூர் நேரம்) நேஷனல் கிரிட் அதிர்வெண் இழப்பை சந்தித்தது, இது ஒரு பெரிய செயலிழப்பை ஏற்படுத்தியது. இந்த அமைப்பை புதுப்பிக்க விரைவான பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கராச்சி, இஸ்லாமாபாத், லாகூர், பெஷாவர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil