போராட்டக்காரர்களால் அமெரிக்க வெள்ளை மாளிகை முற்றுகை - பதுங்கிய டிரம்ப்
US President Donald Trump : அமெரிக்க வெள்ளை மாளிகையின் வெளிப்பகுதியில் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில், அதிபர் டிரம்ப் உள்ளேயே பதுங்கிவிட்டதாகவும், தீவிரவாத நடவடிக்கையின் போது ஏற்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை டிரம்ப், மேற்கொண்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
America, USA, donald trump, white house, white house bunker, george floyd, us protests, us news, world news
அமெரிக்க வெள்ளை மாளிகையில், போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிகழ்வின் போது, அதிபர் டிரம்ப், உள்ளேயே பதுங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisment
அமெரிக்காவின் மின்னபோலிஸ் பகுதியில் ஜார்ஜ் பிளாய்ட் என்று 46 வயது கறுப்பின இளைஞர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ள நோட்டு பயன்படுத்தியதாக இவர் கைது செய்யப்பட்டார். ஆனால் விசாரணையின் போதே இவர் கொலை செய்யப்பட்டார். 20 டாலருக்கு இவர் கள்ள நோட்டு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இவரை கைது செய்த போது, இவரை காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் போலீசார் காலை வைத்து அழுத்தி இருக்கிறார். இதில் ஜார்ஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. போலீசின் இந்த வெறிச்செயல் அப்படியே வீடியோவாக வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் கறுப்பின இளைஞர், போலீசாரால் கொலை செய்யப்பட்ட சம்பவம், அங்கு பூதாகரமாக வெடித்துள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், போராட்டக்காரர்கள், வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டனர். கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன.
Advertisment
Advertisement
இந்த நிலையில் இந்த கொலை காரணமாக அமெரிக்காவில் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்துள்ளது. அங்கு முதலில் மின்னேபோலிஸ் பகுதியில் வெடித்த போராட்டம் தற்போது நாடு முழுக்க பரவி உள்ளது. முக்கிய நகரங்களில் போராட்டம் வெடித்து இருக்கிறது. வாஷிங்டன் டிசி, நியூயார்க், கலிபோர்னியா, மின்னெசோட்டா ஆகிய பல மாகாணங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. பல லட்சக்கணக்கில் அங்கு கறுப்பின மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் வெளிப்பகுதியில் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில், அதிபர் டிரம்ப் உள்ளேயே பதுங்கிவிட்டதாகவும், தீவிரவாத நடவடிக்கையின் போது ஏற்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை டிரம்ப், மேற்கொண்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஊடகங்களை சந்தித்த அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜூட் டீரே கூறியதாவது, போராட்டக்காரர்களின் முற்றுகையின் போது அதிபர் டிரம்புக்கு எவ்வித பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து வெளிப்படையாக தெரிவிக்க இயலாது என்று கூறியுள்ளார்.
அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையில் பதுங்கியது தொடர்பாக, தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளை மாளிகையில், அதிபர் டிரம்புடன் மெலானியா டிரம்ப், 14 வயது மகன் பரோன் உள்ளிட்டோர் பதுங்கு குழியில் பத்திரமாக பதுங்கி இருந்ததாக உளவுப்பிரிவினர் மூலமாக கசிந்துள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபரின் பாதுகாப்பு நடைமுறைகள், அவரது ஆலோசகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் அதிகபட்ச பாதுகாப்பு நிறைந்த வெள்ளை மாளிகை பகுதியில் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்கு வைக்கப்பட்டிருநு்த வழிகாட்டிப்பலகை, பிளாஸ்டிக் தடுப்புகளை தீயிட்டு கொளுத்தினர்.அங்கிருந்த மரங்களின் கிளைகளை வெட்டி எறிந்தனர்.அங்கிருக்கும் பூங்காவின் வடக்குப்பகுதியில் உள்ள பராமரிப்பு அலுவலகங்கள் உள்ளிட்டவைகளை, போராட்டக்காரர்கள் தீக்கிரையாக்கியதாக அசோசியேடட் பிரஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil