கமலா ஹாரிஸ்-க்கு கவுரவம்: பத்மா லட்சுமி தயார் செய்த தென்னிந்திய உணவு

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்-க்காக பத்ம லட்சுமி வித்தியாசமான உணவை தயார் செய்துள்ளார்.

By: January 20, 2021, 7:07:50 PM

அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க்பட்டார். தொடர்ந்து இவர்கள் இருவரும் இன்று பதவியேற்றுக்கொண்டனர். அமெரிக்காவில் கருப்பர் இனத்தை சேர்த்த நாட்டின் முதல் பெண்மணி மற்றும், தெற்காசிய வம்வாவளியை சேர்ந்த முதல் துணை ஜனாதிபதி என்ற சிறப்பை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.

இந்நிலையில் கமலா ஹாரிஸ் இன்று பதவியேற்றதை தொடர்ந்து, பத்ம லட்சுமி என்பவர் அவருக்கு பிடித்த தென்னிந்திய உணவுகளில் ஒன்றை சமைத்துள்ளார். கமலா ஹாரிஸின் தாயார் சியாமலா கோபாலனைப் போலவே, பத்ம லட்சுமியும் சென்னையில் பிறந்தவர். தனது நான்கு வயதில் அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்த அவர், ஒரு எழுத்தாளர், மாடல் மற்றும் எம்மி விருது வென்ற சமையல் நிகழ்ச்சியின் டாப் செஃப் தொகுப்பாளராக இருந்தவர். இந்த உணவு குறித்து அவர் கூறுகையில், எங்களின் புதிய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்காக, நான் இன்று ஒரு தென்னிந்திய சாதத்தை தயார் செய்துள்ளேன் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக பத்ம லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது உணவை அறிமுகப்படுத்திய அவர், புளி சாதம் செய்வதாக கூறியுள்ளார். 12 நிமிடங்கள் நீளமுள்ள இந்த வீடியோவில், புளி சாதத்தை எளிதில் செய்வது எப்படி என்று சமையல் கலைஞர்களுக்கு விளக்கும் அவர், தென்னிந்திய உணவைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாரம்பரிய முறைகளை விளக்கி, அமெரிக்கர்களுக்கு தென்னிந்திய உணவுகள் குறித்து புரிதலை ஏற்படுத்துகிறார்.

இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த வீடியோ, 1 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளையும் நூற்றுக்கணக்கான கருத்துகளையும் பெற்றுள்ளது. சென்னையில் பிறந்த கமலா ஹாரிஸின் தாயார், ஷியாமலா கோபாலன், தனது 19 வயதில் முனைவர் பட்டம் பெற அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இது குறித்து கடந்த காலங்களில், பேசிய திருமதி ஹாரிஸ் தான் சாப்பிட்டு வளர்ந்த தென்னிந்திய உணவு மீதான தனது அன்பை வெளிப்படுத்தினார். மேலும் எங்களிடம் தயிர், சாதம், பருப்பு, உருளைக்கிழங்கு கறி, இட்லி,” சாப்பிட்டிருக்கிறேன்.

கடந்த ஆண்டு, ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், தான் இட்லியை நேசிப்பதாக தெரிவித்தார். மேலும் தான் வளர்ந்து வரும் போது, ​​என் அம்மா என் சகோதரி மாயாவையும் என்னையும் சென்னைக்கு அழைத்து செல்வார். நாங்கள் எங்கிருந்து வந்தோம், எந்த வம்சாவளியைப் பெற்றிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார் என்று தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Padma Lakshmi (@padmalakshmi)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:America vice president honour kamala harris padmalakshmi cook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X