யாருடைய உதவியுமின்றி தனி மனிதனாக அண்டார்டிகாவை வலம் வந்த அமெரிக்கர்...

2008ம் ஆண்டு விபத்தில் சிக்கி நடக்கவே முடியாது என்ற நிலையில் இருந்தவர் காலின் என்பது குறிப்பிடத்தக்கது.

American adventurer Colin O’Brady : அண்டார்டிகாவில் இருக்கும் குளிர் பற்றி உலகமே அறியும். கடுமையான குளிர். சமாளிப்பது கடினம். எங்காவது பனிச்சரிவில், ஆற்றில் சிக்கிக் கொண்டால் உயிர் பிழைப்பது என்பது கனவிலும் கூட நடக்காத ஒன்று. ஆனால் நடக்கவே இயலாத ஒன்றை நடத்திக் காட்டும் துணிச்சல் பெற்றவர்கள் தான் வரலாற்றில் இடம் பெறுகின்றார்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த காலின் ஓ’பிராடி என்பவர் துணிச்சலான சவாலை ஏற்றுக் கொண்டு அண்டார்டிக்காவின் 921 மைல்களை நடந்தே சாதனை புரிந்துள்ளார். அதுவும் தனியாக. யாருடைய உதவியும் இன்றி.

American adventurer Colin O’Brady – பயணமும் சாதனையும்

ஜிக் – ஜாக் வளைவு நெளிவுகள் அனைத்தையும் கணக்கில் கொள்ளும் போது அவர் சுமார் 932 மைல்கள் ஆளரவமற்ற அண்டார்க்காவை கடந்து சாதனை புரிந்துள்ளார். இவருடைய 54 நாட்கள் பயணம் நவம்பர் மாதம் 3ம் தேதி தொடங்கியது. ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டு இவருடைய பயணங்கள் முழுமையாக கண்காணிக்கப்பட்டது.

இதற்கு முன்பு இது போன்ற சாதனைகளை யாரும் புரியவில்லை என்றாலும் இதற்கு முன்பு நார்வேயின் ரோவால்ட் அமுயூண்ட்சன் மற்றும் இங்கிலாந்தின் ராபர்ட் ஃபால்கன் ஸ்காட் போன்றோர் இது போன்ற முயற்சியில் ஈடுபட்டனர். முதன் முதலாக உலகின் தென் துருவ முனையை தொட்டவர்கள் இவர்கள் தான்.

1996-97ம் ஆண்டு போர்கே அவுஸ்லாண்ட், இந்த கண்டத்தினை தனியாக கடந்த முதல் மனிதர் ஆவார். ஆனால், அவருக்கு உதவிகள் கிடைக்கப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 12ம் தேதி தென் திருவத்தை அடைந்த காலின், நாள் ஒன்றிற்கு 20 மைல்கள் முதல் 30 மைல்கள் தூரம் வரை நடந்து வந்தார்.

கிறிஸ்துமஸ் அதிகாலை அன்று “நான் இது தான் என்னுடைய தருணம் என்று உணர்ந்தேன். இந்த சாதனையை நான் உருவாக்கப் போகின்றேன் என்று என்னுடைய உள் மனது கூறிக்கொண்டே இருந்தது. கடைசி 32 மணி நேரத்தில் 77 மைல்கலை கடந்து சாதனை புரிந்த போது நான் எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டவனாக என்னை உணர்ந்தேன்” என்று கூறியிருக்கிறார் காலின்.

எப்போதும் இரவு 8 மணிக்கே நடைபயணத்தை முடித்துக் கொள்ளும் காலின், சில நாட்களாக 09 மணி வரை நடை பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். கிறிஸ்துமஸ் வந்த நாளில் இருந்து இரவு 11 மணி நேரம் வரை நடக்க தொடங்கியிருக்கிறார். கிறிஸ்துமஸிற்கு பிறகு யாரிடமும் எந்த தொடர்பும் இல்லாமல் நடந்த வாறே இருந்திருக்கிறார்.

இறுதியாக தனிமனிதனாக அண்டார்டிகாவை வலம் வந்து சாதனையை புரிந்துவிட்டார் காலின் ஓ பிராடி. 2008ம் ஆண்டு விபத்தில் சிக்கி நடக்கவே முடியாது என்ற நிலையில் இருந்தவர் காலின் என்பது குறிப்பிடத்தக்கது. எவெரெஸ்ட் சிகரம் ஏறியும் சாதனை படைத்திருக்கிறார் காலின் ஓ பிராடி.

காலின் கடந்த வந்த பாதை

American adventurer Colin O'Brady

American adventurer Colin O’Brady

American adventurer Colin O'Brady

American adventurer Colin O'Brady American adventurer Colin O'Brady American adventurer Colin O'Brady American adventurer Colin O'Brady American adventurer Colin O'Brady American adventurer Colin O'Brady

இவருடைய 54 நாட்கள் பயணித்தில், 1.30 நாட்கள் மட்டும் தன்னுடைய டெண்டில் இருந்து கூட வெளியே வர இயலாத அளவிற்கு உடலில் பனியால் காயங்கள் ஏற்பட்டது. அதனை ஆற்றும் பொருட்டு அவர் தன்னுடைய டெண்டிலேயே அந்த நேரங்களை செலவிட்டார்.

மேலும் படிக்க : அந்தமான் நிக்கோபர் தீவுகளில் மாட்டிக் கொண்ட அமெரிக்கரின் இறுதி கடிதம்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close