Donald Trump : கொரோனா வைரஸ் தொற்றினால் அவதிப்படுபவர்களுக்கு குறைந்தது இரண்டு வாரம் சிகிச்சை அளிப்பது வழக்கம். கடந்த 02ம் தேதி அன்று தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை அவர் உறுதி செய்தார். க்ளீவ்லேண்டின் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான விவாதத்தில் பங்கேற்று வீடு திரும்பினார் ட்ரெம்ப். அவரின் ஆலோசகர்களில் ஒருவரன ஹோப் ஹிக்ஸிற்கு கொரோனா தொற்று உறுதியாகவும் ட்ரெம்ப் மற்றும் மெலனியா தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.
மேலும் படிக்க : ட்ரெம்ப், மெலனியாவுக்கு கொரோனா தொற்று உறுதி… அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ட்ரெம்பின் வயது, பாலினம், மற்றும் எடை ஆகியவற்றை கருத்தில் கொண்டும், அவருக்கு மூச்சுவிடுவதில் பிரச்சனை இருப்பதாலும் வால்ட்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரெம்டெசிவர் 2வது டோஸும், டெக்ஸாமெத்தசோன் முதல் டோஸும் அளிக்கப்பட்டது. அவருக்கு கடுமையான தொற்றுகள் ஏதும் நுரையீரலில் ஏற்படவில்லை என்பதையும், காய்ச்சல் முற்றிலும் குணம் அடைந்துவிட்டது என்பதையும் உறுதி செய்தனர் அவருடைய சிறப்பு மருத்துவக்குழு. ஆனால் அவருடைய இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு இரண்டு முறை குறைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிகிச்சைக்கு நடுவே அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறி, மருத்துவமனை முன்பே குவிந்திருந்த அவரின் ஆதரவாளர்களுக்கு காரில் வலம் வந்து இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
மேலும் படிக்க : கொரோனா தொற்று: டொனால்ட் டிரம்பின் சோதனை காக்டெயில்
இந்நிலையில் அவர் இன்று வீட்டிற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அமெரிக்க அரசியல் வட்டாரங்கள், கொரோனாவின் தாக்கத்தை குறைத்து மதிப்பீடு செய்வதற்காகவும், விவாதங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் இவ்வாறு பொலிட்டிக்கல் ஸ்டண்ட் செய்கிறார் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர். நவம்பர் 3ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil