கொரோனா தடுப்பூசி தான் ட்ரெம்பின் ஆயுதம் … தேர்தலுக்கு முன்பு அமெரிக்காவில் அறிமுகம் ஆகலாம்!

அக்டோபர் மாத இறுதி அல்லது நவம்பர் மாத துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

American President Trump plan to impress people by introducing Covid19 vaccine :  அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் 3ம் தேதி நடைபெற உள்ளது. குடியரசுக்கட்சியின் சார்பில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், ஒபாமா ஆட்சி காலத்தில் துணை அதிபராக பணியாற்றிய ஜோ பைடன் போட்டியிடுகிறார்.

தவறான பொருளாதார கொள்கைகள், கொரோனா பரவல் நடவடிக்கையில் தோல்வி, புலம்பெயர் அகதிகளை எல்லையிலேயே நிறுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக மக்கள் ட்ரெம்பின் ஆட்சியை விமர்சனம் செய்ய துவங்கியுள்ளனர். இந்நிலையில் தேர்தலுக்கு முன்பு கொரோனா தடுப்பு மருந்தினை அறிமுகம் செய்யும் முனைப்பில் ஈடுபட்டுள்ளார் ட்ரெம்ப். தேர்தலுக்கு முன்பாக கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அரசியல் ஆதாயம் தேடும் ஒரு காரணியாக அதை அவர் மாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க : 5 மாதத்துக்கு பின்பு சென்னையில் மெட்ரோ சேவை… ஏகப்பட்ட மாற்றங்கள் அறிவிப்பு!

இந்நிலையில் அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மாகாண அரசுகள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் அக்டோபர் மாத இறுதி அல்லது நவம்பர் 1ம் தேதி கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்றும், முன்கள பணியாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளில் பைடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: American president trump plan to impress people by introducing covid19 vaccine

Next Story
”ராக்” குடும்பத்தினருக்கு கொரோனா : வீடியோவால் ரசிகர்கள் வருத்தம்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express